Telegram Web Link
அக்டோபர் 13.
உலக பேரிடர் கட்டுப்பாட்டு தினம்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 13 ம் தேதி உலக பேரிடர் கட்டுப்பாட்டு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று அந்த தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் சர்வதேச இயற்கை சீரழிவு குறைப்பு தினம் அக்டோபர் 13 ம் தேதியை ஐநா சபை கடந்த 1989ம் ஆண்டில் அறிவித்தது.

புயல், வெள்ளம், பூகம்பம், எரிமலை ,சுனாமி சூறாவளி, காற்று போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு வரும் நிலையில் இயற்கை பேரழிவுகளை தடுத்தல், குறைத்தல் மற்றும் மக்களை இயற்கை பேரழிவில் இருந்து பாதுகாத்தல் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தவே இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
13 அக்டோபர் 1884.

சர்வதேச நேரம் கணக்கிடும் இடமாக இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச் தேர்வு செய்யப்பட்டது.

பூமி உருண்டை என்று விஞ்ஞான பூர்வமாக முடிவான பின்பு, இந்த பூமிப்பந்தின் ஒரு பகுதியை தொடக்கமாகக் கொள்ள முடிவு செய்தனர்.

மேலும் பூமியிலுள்ள இடங்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள கடக ரேகை, அட்ச ரேகை போன்ற கற்பனைக் கோடுகளை உருவாக்கினர்.

அவை இரண்டும் சந்திக்கும் மையப்புள்ளியை ‘0’ டிகிரி என நிர்ணயித்தனர்.
அந்த இடமே கிரீன்விச் ஆகும்.
வரலாற்றில் இன்று.
14 அக்டோபர் 2025-செவ்வாய்.


1066 : இங்கிலாந்தில் ஹாஸ்டிங்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் வில்லியமின் படைகள் இரண்டாம் ஹரோல்ட் மன்னனைக் கொன்றனர்.

1773 : அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்குவதற்கு முன் கிழக்கிந்தியக் கம்பெனியின் தேயிலைக் கப்பல்கள் பல மேரிலாந்தில் எரிக்கப்பட்டது.

1884 : அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மென் தான் கண்டுபிடித்த போட்டோகிராபி பிலிமிற்கு காப்புரிமம் பெற்றார்.

1898 : இங்கிலாந்து, கோர்ன்வால் அருகே மொஹேகன் என்ற நீராவிக்கப்பல் கவிழ்ந்ததில் 106 பேர் உயிரிழந்தனர்.

1902 : இந்தியாவின் முதல் வனத்துறை அருங்காட்சியகம் கோயம்புத்தூரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

1903 : யாழ்ப்பாணத்தின் ஜாஃப்னா என்ற பயணிகள் கப்பல் நெடுந்தீவுக்கு பயணம் மேற்கொண்டது.

1912 : அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் மில்வாக்கியில் உரை நிகழ்த்தியபோது மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவனால் சுடப்பட்டார்.

1913 : பிரிட்டனில் இடம்பெற்ற நிலக்கரி சுரங்க விபத்தில் 439 பேர் உயிரிழந்தனர்.

1920 : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக பெண்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

1939 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பல், பிரிட்டன் கடற்படையின் போர்க் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 800 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

1940 : இரண்டாம் உலகப் போர் :- லண்டனில் பிளிட்ஸ் குண்டு வீச்சுகளின் போது பால்ஹாம் ரயில் நிலையத்தில் 66 பேர் கொல்லப்பட்டனர்.

1943 : போலந்தில் நாஜிக்களின் வதை முகாமில் இருந்த 600 கைதிகள் கிளர்ச்சியை மேற்கொண்டதில் 11 நாஜிக்கள் கொல்லப்பட்டனர்.
300க்கும் அதிகமான கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.

1944 : இரண்டாம் உலகப்போர் :- கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரம் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போர் :- ஜூலை 20 ல் இடம்பெற்ற ஹிட்லரின் படுகொலை முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரி இர்வின் ரோமெல் கட்டாயமாக தற்கொலை செய்ய தூண்டப்பட்டு இறந்தார்.

1948 : இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.

1949 : சீன உள்நாட்டுப் போர்:- சீன கம்யூனிஸ்ட் படைகள் குவாங்சௌ நகரைக் கைப்பற்றின.

1953 : இந்தியாவில் எஸ்டேட் வரி சட்டம் நடைமுறைக்கு வந்தது.

1956 : நாக்பூரில் அண்ணல் அம்பேத்கர் தனது 3,85,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.

1957 : ஸ்பெயினில் வாலென்சியா நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கினால் 81 பேர் உயிரிழந்தனர்.

1960 : கியூபாவில் வெளிநாட்டு வங்கிகள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

1964 : மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1968 : மேற்கு ஆஸ்திரேலியாவில் 6.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 28 பேர் வரை உயிரிழந்தனர்.

விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ -7 விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் புவியைச் சுற்றுவது ஒளிபரப்பப்பட்டது.

1973 : தாய்லாந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மக்கள் ஆட்சிக்காக போராட்டத்தில் ஈடுபட்டதால் 77 பேர் கொல்லப்பட்டு 857 பேர் காயமடைந்தனர்.

1983 : கிரனாடாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் பிரதமர் மோரிஸ் பிசப் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.

1987 : டெக்சாஸில் ஜெசிக்கா என்ற 18 மாத குழந்தை கிணறு ஒன்றில் விழுந்தது.
58 மணி நேரத்திற்கு பின்னர் இது உயிருடன் மீட்கப்பட்ட நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடியாக காண்பிக்கப்பட்டது.

1990 : வளைகுடாப் போரினால் இந்தியாவில் ஒரே நாளில் பெட்ரோல் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டது.

1991 : பர்மாவின் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூகி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

1994 : பாலஸ்தீனத் தலைவர் யாசர் அரபாத், இஸ்ரேல் பிரதமர் ஜாக் ரபீன், வெளியுறவுத்துறை அமைச்சர் சிமோன் பெரஸ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

2014 : நேபாளத்தில் இடம்பெற்ற பனிப் புயலினால் 43 பேர் உயிரிழந்தனர்.

2017 : சோமாலியாவில் இடம்பெற்ற லாரி குண்டுவெடிப்பில் 358 பேர் கொல்லப்பட்டனர்.
400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கிரேக்கத்தின் 1 யூரோ நாணயத்தின் வடிவமைப்பு, பண்டைய ஏதெனியன் டெட்ராட்ராக்ம் என்ற வெள்ளி நாணயத்தை நினைவூட்டும் வகையில் அமைந்தது, இது ஒரு ஆந்தையைக் கொண்ட ஒரு வெள்ளி நாணயம், இது கிமு 5 ஆம் நூற்றாண்டில் - தோராயமாக 2,500 ஆண்டுகளுக்கு முன்பு - பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. ஆந்தை ஞானத்தின் தெய்வமான ஏதெனாவை அடையாளப்படுத்தியது, மேலும் ஏதென்ஸின் நீடித்த சின்னமாக மாறியது. நவீன 1 யூரோ நாணயத்தில் இந்த குறிப்பிடத்தக்க வடிவமைப்பை மீண்டும் உருவாக்குவதன் மூலம் கிரீஸ் அதன் பண்டைய பாரம்பரியத்தை மதிக்க இதனை தேர்ந்தெடுத்தது.
👍1
வரலாற்றில் இன்று.
15 அக்டோபர் 2025-புதன்.

1066 : இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார்.
ஆனாலும் அவர் முடி சூடவில்லை.
டிசம்பர் 10 வரை ஆட்சியில் இருந்தார்.

1582 : இத்தாலி, போலந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
அக்டோபர் 4 ற்கு பிறகு 15 ற்கு நேரடியாக மாற்றப்பட்டது.

1655 : போலந்து, லூம்லின் நகரில் இருந்த யூதர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

1764 : ஆற்காடுப் படைகளின் போர்வீரர் மருதநாயகம் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.

1815 : பிரான்ஸின் முதலாம் நெப்போலியன் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயிண்ட் ஹெலனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

1854 : இரண்டு வண்ணங்களில் தபால் தலையை வெளியிட்ட, உலகின் இரண்டாவது நாடு என்னும் பெருமை இந்தியாவிற்கு கிடைத்தது.

1855 : ஓரங்களில் துளைகளிட்ட தபால் தலைகளை இந்தியா வெளியிட்டது.

1863 : அமெரிக்க உள்நாட்டுப் போர் :- முதல் முறையாக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.

1878 : தாமஸ் ஆல்வா எடிசன் பல்பு தயாரிக்கும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

1879 : ஸ்பெயின் தென்கிழக்கே செகுரா ஆறு பெருக்கெடுத்ததில் 1,077 பேர் உயிரிழந்தனர்.

1880 : ஜெர்மனியில் கோல்ன் கதீட்ரல் திறப்பு விழா கொண்டாடப்பட்டது.

1915 : முதலாம் உலகப் போர்:- ஆஸ்திரியா-ஹங்கேரி செர்பியாவை முற்றுகையிட்டது.

1932 : டாடா விமான நிறுவனம் தனது முதலாவது விமான சேவையை ஆரம்பித்தது.
பின்னர் ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றப்பட்டது.
டாடா ஏர்மெயில் சர்வீஸ் ஆரம்பமானது.

1940 : லண்டன் மீது கடுமையான ஜெர்மனியின் வான்வழித் தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டனர்.

கட்டலோனியாவின் ஜனாதிபதி லூயிஸ் கம்பனிஸ் ஸ்பெயின் அரசினால் தூக்கிலிடப்பட்டார்.

1944 : ஹிட்லரின் நாஜிக் கட்சிக்கு ஒப்பான அம்பு குறுக்கு கட்சி ஹங்கேரியில் ஆட்சியைப் பிடித்தது.

1945 : இரண்டாம் உலகப் போர் :- பிரான்ஸின் முன்னாள் பிரதமர் பியர் லாவல் நாட்டுத் துரோகத்திற்காக சுட்டுக் கொல்லப்பட்டார்.

1946 : அனைத்துலக நீதிமன்றம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு பேரவை ஏற்றுக் கொண்டது.

1949 : மணிப்பூர் இந்தியாவுடன் இணைந்தது.

1951 : மெக்சிகோவின் லூயி மிராமோண்ட்ஸ் முதன்முறையாக கருத்தடை மாத்திரையை அறிமுகப்படுத்தினார்.

1953 : பிரிட்டன் தனது முதலாவது அணுகுண்டு சோதனையை தெற்கு ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தியது.

1954 : வட அமெரிக்காவில் சூறாவளித் தாக்கியதில் 95 பேர் உயிரிழந்தனர்.
டொரோண்டோ வரை பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

1956 : போர்ட்ரான் என்ற முதலாவது நவீன கணினி மொழி முதல் தடவையாக குறியீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

1966 : ஆப்ரிக்க- அமெரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்க பிளாக் பாந்தர் என்ற பெயரில் மார்க்சிய இயக்கம் அமெரிக்காவின் ஓக்லாண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

1967 : ஸ்டாலின்கிரேட் சண்டையின் வீரர்களுக்காக தாய்நாடு அழைக்கிறது என்ற சிலை திறந்து வைக்கப்பட்டது.

1970 : மெல்பர்ன் நகரில் வெஸ்ட் கேட் பாலம் கட்டும் போதே உடைந்து விழுந்ததில் 35 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

அன்வர் சதாத் எகிப்தின் அதிபரானார்.

1979 : எல் சல்வடோர் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1987 : புர்கினா பாசோவில் அரசுத் தலைவர் தாமஸ் சங்காரா மீது ராணுவப் புரட்சி மேற்கொள்ளப்பட்டது.

1990 : 5 நாள் பயணமாக தென்ஆப்ரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா இந்தியாவுக்கு வருகை புரிந்தார்.

பனிப்போரை தணிக்க உதவியமைக்காக சோவியத் தலைவர் மிக்கைல் கார்பசேவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1995 : ஈராக்கின் அதிபராக சதாம் உசேன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1997 : நாசாவின் ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக்கோளை நோக்கி ஏவப்பட்டது.

கொழும்பு, கோட்டையில் உலக வணிக மையத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
சுற்றுலாப் பயணிகள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

2001 : நாசாவின் கலிலியோ விண்கலம் வியாழனின் ஐஓ சந்திரனுக்கு அருகே 112 மைல் தூரம் சென்றது.

2003 : சீனா முதன்முறையாக ஷென்சோ-5 விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.

2006 : ஹவாயில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் நிலச்சரிவுகள் மின்சார நிறுத்தம் உட்பட பெரும் சேதம் ஏற்பட்டது.

2008 : தாய்லாந்தும், கம்போடியாவும் அவற்றின் எல்லையிலுள்ள 900 ஆண்டுகள் பழமையான பிரியா விகார் கோவிலுக்காக போரிட்டுக் கொண்டன.

2013 : பிலிப்பைன்ஸை 7.2 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 215 பேர் உயிரிழந்தனர்.

2016 : ருவாண்டாவில் 150 நாடுகள் ஐக்கிய நாடுகள் திட்ட உச்சி மாநாட்டில் பங்கேற்றன.
👍1
அக்டோபர் 15.
உலகக் கைகழுவும் நாள்.
(Global Handwashing Day)

உலக மக்கள் நாள்தோறும் தங்களது கைகளை நீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கத்தோடு பன்னாட்டளவில் அனுசரிக்கப்படுகிறது.

2008 ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ம் நாள் உலகக் கைகழுவும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பது நோய்த்தடுப்புக்கு ஒரு முக்கிய வழியாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.

கைக் கழுவுதல் என்பது ஒரு சிறிய செயல்தான். அதை முறையாகச் செய்ய வேண்டும். இதை முறையாகச் செய்யாததால்தான் பல தொற்று நோய்கள் ஏற்படுகிறது.

சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும், விளையாடிய பிறகு, கழிப்பறை சென்று வந்த பிறகு, வாகனம் ஓட்டி வந்த பிறகு என எந்தச் செயலைச் செய்த பின்னும் கைகளை முறையாகக் கழுவ வேண்டும்.

அதோடு செல்போன், லேப்டாப், கம்யூட்டர் பயன்படுத்திய பிறகும் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகும் கண்டிப்பாக கைக்கழுவாமல் சாப்பிடக்கூடாது.
அக்டோபர் 15.
சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்.

வீட்டு வேலைகளை மட்டுமல்லாமல் விவசாயம், மீன் பிடித்தல், மேய்ச்சல் உள்ளிட்ட தொழில்களையும் கிராமப்புற பெண்கள் செய்கின்றனர்.

உலகளவில் பெண்களின் வேலைவாய்ப்பில் மூன்றாவது இடத்தில் விவசாயத்துறை உள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் 60 சதவீத பெண்கள் விவசாயப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இவர்களை அங்கீகரிக்கும் விதத்தில் 2008 ம் ஆண்டுமுதல் அக்டோபர் 15 ம் தேதி சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கிராமப்புற பெண்களுக்கு உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர இத்தினம் வலியுறுத்துகிறது.
👍1
அக்டோபர் 15.
உலக வெண்மை பிரம்பு பாதுகாப்பு தினம்.

வெண்மைத்தடி பயன்படுத்தும் முறை என்பது 1931ம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது.

உலகெங்கும் வாழும் லட்சக்கணக்கான பார்வையற்ற மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் இத்தினம் அக்டோபர் 15 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
1
அக்டோபர் 15.
உலக மாணவர்கள் தினம்.

இந்திய இளைஞர்கள், மாணவர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினமான அக். 15 உலக மாணவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

உடலால் மறைந்தாலும் இவரது கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஆற்றிய பங்கு, மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்ததன் மூலம் அனைவரது மனதிலும் வாழ்கிறார்.

1931 அக்., 15ல் ராமேஸ்வரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து, ராக்கெட், அணு ஆயுத, ஏவுகணை விஞ்ஞானி, நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தார். 2015ல் உயிர் பிரியும் வரை இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையால் இது அதிகாரப்பூர்வமாக "உலக மாணவர் தினம்" என்று அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
2
அக்டோபர் 15.
ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

இந்திய ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 1931ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த இவர் 1980ஆம் ஆண்டு SLV-III ராக்கெட்டை பயன்படுத்தி ரோகிணி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்.

இவர் பத்மபூஷண்(1981), பத்மவிபூஷண்(1990), பாரத ரத்னா (1997) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் ஆகிய புத்தகங்கள் புகழ் பெற்றவைகள்.

1999ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். 2002ம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக ஜூலை 25, 2002ல் பதவியேற்றார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி மறைந்தார்.
அக்டோபர் 15.
நோவா வெப்ஸ்டர்.
(Noah Webster)

அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணத்திற்கும், எழுத்திலக்கணத்திற்கும் காரணியான நோவா வெப்ஸ்டர் 1758 ம் ஆண்டு அக்டோபர் 16 ம் தேதி மேற்கு ஹார்ட்பர்டில் பிறந்தார். இவர் பள்ளிப் புத்தகங்களை எழுதினார். அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்க புத்தகங்களையே கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

1783 ல் முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தை வெளியிட்டார். அவரது மொழி சீர்த்திருத்தமைப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.

1828 ல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதியான வெஸ்டரின் அகராதியை வெளியிட்டவரும் இவரே. இவர் 1843 ம் ஆண்டு காலமானார்.
👍1
வரலாற்றில் இன்று.

16 அக்டோபர் 2025-வியாழன்.


1384 : ஜட்விகா ஒரு பெண் ஆனாலும் போலந்தின் மன்னராக முடிசூடினார்.

1775 : அமெரிக்காவில் போர்ட்லன்ட் நகரம் பிரிட்டனால் எரிக்கப்பட்டது.

1780 : நெதர்லாந்து, சிறிய அண்டிலீஸில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 24,000 பேர் உயிரிழந்தனர்.

1793 : பிரெஞ்சுப் புரட்சியின் உச்சகட்டத்தில் பதினாறாம் லூயி மன்னரின் மனைவி மேரி அண்டோனெட் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப் பட்டார்.
வாட்டிக்னீஸ் போரில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.

1799 : பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.

1813 : கூட்டணி நாடுகள் நெப்போலியன் படை மீது லீப்ஜிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.

1834 : லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.

1846 : வில்லியம் மோர்டன் ஈதர் மயக்க மருந்தை முதன் முறையாக மாசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் பரிசோதித்தார்.

1859 : கண்டி திருமணச் சட்டத்தில் பல கணவர் மணம் சட்டவிரோதமாக அறிவிக்கப் பட்டது.

1869 : இங்கிலாந்தில் பெண்களுக்கான முதலாவது விடுதியுடன் கூடிய கல்லூரி கேம்பிரிட்ஜ் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1905 : ரஷ்ய ராணுவம், எஸ்தோனியாவில் மக்கள் கூட்டம் ஒன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.

1916 : மார்கரெட் சாங்கர் அமெரிக்காவின் முதலாவது குடும்பக்கட்டுப்பாடு மருத்துவமனையை நியூயார்க் புரூக்ளினில் ஆரம்பித்தார்.

1919 : ஹிட்லர் முதன்முறையாக பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

1923 : வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1926 : ட்ரூப் கப்பல் யாங்சே ஆற்றில் மூழ்கியதில் 1,200 பேர் உயிரிழந்தனர்.

1934 : குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுகளின் தாக்குதல் ஆரம்பமானது.

1936 : ஹங்கேரியில் நாஜிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1939 : நெதர்லாந்தில் சர்க்கரைக்கு ரேஷன் முறை கொண்டுவரப்பட்டது.

1942 : பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் உயிரிழந்தனர்.

1944 : எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் வெளியானது.
110 வாரங்கள் ஓடி மூன்று தீபாவளிகளைக் கண்டது.

1946 : நியூரம்பெர்க் தீர்ப்பாயம் :- போர்க்குற்றம் சாட்டப்பட்ட நாஜித் தலைவர்களின் தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

1949 : கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1951 : பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகத் அலிகான் ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1964 : முதல் அணுகுண்டு பரிசோதனையை சீனா வெற்றிகரமாக நடத்தியது.

1975 : பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கடைசி மனிதராக வங்காளதேசத்தைச் சேர்ந்த ரகீமா பானு என்ற இரண்டு வயது குழந்தை அடையாளம் காணப்பட்டார்.

1979 : பாகிஸ்தானில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது.

1981 : ஜப்பானில் நிலக்கரிச் சுரங்கத்தில் மீத்தேன் வாயுக் கசிவினால் 94 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1984 : தென்னாப்ரிக்காவில் டெஸ்மாண்ட் டுட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

1993 : இங்கிலாந்தில் நாஜிக்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது.

1995 : ஸ்காட்லாந்தில் ஸ்கை பாலம் திறக்கப்பட்டது.

1996 : குவாட்டமாலாவில் கால்பந்து போட்டி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 84 பேர் உயிரிழந்தனர்.

2002 : பண்டைய அலெக்சாண்டிரியா நூலகம் மீண்டும் திறக்கப்பட்டது.

2003 : தமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி என்பவர் பற்றி எழுதப்பட்டது.

2006 : இலங்கைப் போர்:- அபரணையில் நடத்தப்பட்டத் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 102 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

2013 : லாவோஸில் லாவோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 49 பேர் உயிரிழந்தனர்.
1
அக்டோபர் 16.
உலக மயக்கவியல் தினம்.

1847ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் முதல் மருத்துவக் கல்லூரியில், முதன்முறையாக ஈதர் பயன்படுத்தி அறுவை சிகிச்சை நடந்தது.

மருத்துவ உலகில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த நிகழ்வை போற்றும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 16 ம் தேதி உலக மயக்கவியல் தினமாக (உலக அனஸ்தீஸியா தினம் (அ) ஈதர் தினம்) கடைபிடிக்கப்படுகிறது.
அக்டோபர் 16.
உலக உணவு தினம்.

உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16 ம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 1979 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.

பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
2
இதே அக்டோபர் 16.

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம்.

பாஞ்சாலங்குறிச்சியையும், கயத்தாறையும் உலக வரைப்படத்தில் நிரந்தரமாகப் பதித்த பெருமைக்குரியவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
'வீரம் மிகுந்தவர்' என்ற பொருள்படும் 'கெட்டி பொம்மு' என்ற தெலுங்கு வார்த்தைகள் ‘கட்டபொம்மன்’ என்று நாளடைவில் மாறின. இந்த வீரப்பரம்பரையில் 1760ம் ஆண்டு சனவரி 3ம் நாள் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

தனது 30வது வயதில் பாளையக்காரராகப் பொறுப்பேற்ற வீரபாண்டியன், ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளுடன் அடிக்கடி மோத வேண்டியிருந்தது. இந்த நிறுவனம் விதித்திருந்த வரியைக் கட்ட மறுத்ததால், இந்த மோதல்கள் முற்றுகைகளாக, சண்டைகளாக உருவெடுத்தன.

இவற்றில் கட்டபொம்மன் படையும், ஆங்கிலேய நிறுவனமும் மாறி மாறி வெற்றி பெற்றன.

1799ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில், ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1ம் தேதி புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு, கிழக்கிந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

1799ம் ஆண்டு, இதே அக்டோபர் 16ம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டு, வீரமரணம் அடைந்தார்.
வரலாற்றில் இன்று.
17 அக்டோபர் 2025-வெள்ளிக்கிழமை.

1091 : லண்டனை பெரும் சூறாவளி காற்று தாக்கியது.

1346 : இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்ட் ஸ்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனை சிறைபிடித்து 11 ஆண்டுகள் லண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தார்.

1610 : பதின்மூன்றாம் லூயி பிரான்ஸின் மன்னராக முடிசூடினார்.

1660 : இங்கிலாந்தின் முதலாம் சார்லஸ் மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த 9 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

1662 : இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் மன்னன் டன்கிர்க் நகரை பிரான்ஸிற்கு 40 ஆயிரம் பவுன்களுக்கு விற்றார்.

1803 : பிரிட்டிஷ் படை ஆக்ரா கோட்டையை தாக்கத் தொடங்கின.

1861 : ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்தில் பழங்குடிகளின் தாக்குதலில் 19 வெள்ளை இனத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

1907 : மார்க்கோனி தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோஷியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.

1916 : டச்சு பெண்கள் வாக்குரிமைக்காக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

1920 : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தாஷ்கண்டில் துவக்கப்பட்டது.

1933 : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார்.

1941 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனியின் நாஜிப் படையினர் கிரேக்கத்தின் செரெஸ் என்ற கிராமத்தில் அனைத்து ஆண்களையும் படுகொலை செய்தனர்.

இரண்டாம் உலகப்போரில் முதன்முறையாக ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பல், அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.

1943 : சயாம் மரண ரயில் பாதை (பர்மா-தாய்லாந்து ரயில் சேவை) ஆரம்பிக்கப்பட்டது.

1956 : முதலாவது வணிக நோக்கு அணு உலையை பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் மகாராணி செலாபீல்ட் என்ற இடத்தில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

1961 : பாரிஸில் போராட்டத்தில் ஈடுபட்ட 210 அல்ஜீரியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1965 : நியூயார்க் டைம்ஸ் 946 பக்கங்களுடன் 3.4 கிலோ எடையில் வெளிவந்தது.

நியூயார்க் உலகக் கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு முடிவுற்றது.

1972 : எம்ஜிஆர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவக்கினார்.

தென் கொரியாவில் ராணுவ ஆட்சிப் பிரகடனம் செய்யப்பட்டது.

1979 : அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

1989 : சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் 6.9 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 63 பேர் உயிரிழந்தனர்.

1995 : யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை ராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.

1998 : நைஜீரியாவில் பெட்ரோலியக் குழாய் வெடித்ததில் 1,200 கிராமத்தவர்கள் உயிரிழந்தனர்.

2003 : தைபே 101 உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெயரைப் பெற்றது.

2006 : இலங்கைப் போர் :- புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம் இலங்கை அரசின் விமானத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.

2013 : ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

2018 : கனடாவில் பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமாக்கப்பட்டது.

கிரிமியாவில் தொழில்நுட்பக் கல்லூரியில் 18 வயது மாணவன் ஒருவன் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டு 70 பேர் காயமடைந்தனர்.
அக்டோபர் 17.
உலக வறுமை ஒழிப்பு நாள்.
(International Day for the Eradication of Poverty)

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ம் நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக 
ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நாள் 1987 ம் ஆண்டு முதன் முதலாக பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது.
2025/10/31 09:05:05
Back to Top
HTML Embed Code: