அக்டோபர் 24, 1801.
மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்.

1801 ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி ஆங்கிலேயர்கள் அவர்களை தூக்கில் போட்டனர். அவர்களது உடல்கள் இரண்டு நாட்களாக
தூக்கிலேயே தொங்கியது.

இதனால் சிவகங்கை சீமையில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இரண்டு நாளில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்று பக்கங்களில் வட இந்தியாவில் நடைபெற்ற போர்களே வீரம் செறிந்த வரலாறுகளாக பெரும்பாலும் காட்டப்பட்டிருக்கும்.

ஆனால் சிப்பாய் கலகத்திற்கு முன்பாகவே வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தெற்கில் இருந்து முதன்முதலில் கூக்குரலிட்டவர் மாமன்னர் பூலித்தேவர்.

அவரை தொடர்ந்து ஆங்கிலேயப் பேரரசை எதிர்த்தவர் மாவீரர் திப்பு சுல்தான். அவர்கள் வழியில் தீரத்தோடு அந்நிய ஆட்சியை அகற்ற போராடியவர்கள் தான் மாமன்னர்கள் மருது சகோதரர்கள்.
வரலாற்றில் இன்று.
25 அக்டோபர் 2025-சனி.

1616 : ஆஸ்திரேலியாவில் கால்பதித்த இரண்டாவது ஐரோப்பியர் என்ற பெயரை டச்சு கேப்டன் டிர்க் ஹார்டாக் பெற்றார்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் டிர்க் ஹார்டாக் தீவு அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

1760 : மூன்றாம் ஜார்ஜ் பிரிட்டனின் மன்னராக முடிசூடினார்.

1881 : தி ஈவ்னிங் இல்லஸ்ட்ரேட்டட் செய்தித் தாள் லண்டனிலிருந்து வெளியானது.

1900 : பிரிட்டன் டிரான்ஸ்வால் குடியேற்றத்தை இணைத்துக்கொண்டது.

1918 : அலாஸ்காவில் பிரின்சஸ் சோஃபியா என்ற கப்பல் மூழ்கியதில் 353 பேர் உயிரிழந்தனர்.

1924 : இந்தியாவில் சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயரால் சிறைபிடிக்கப்பட்டார்.

1927 : இத்தாலியின் பயணிகள் கப்பல் பிரேஸிலில் மூழ்கியதில் 314 பேர் உயிரிழந்தனர்.

1929 : ஆப்கானிஸ்தான் மன்னராக நாதிர் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1935 : ஹைட்டியில் இடம்பெற்ற சூறாவளி, மழை வெள்ளத்தால் 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1936 : பெர்லின் வானொலியில் முதன் முதலாக நேயர் விருப்பம் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹிட்லரும் முசோலினியும் இணைந்து ரோம்-பெர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்.

1941 : உக்ரைனின் ஒடேஸா நகரில் 16 ஆயிரம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஜெர்மனி மாஸ்கோவைத் தாக்கியது.

1944 : இரண்டாம் உலகப் போர் :- அமெரிக்காவின் டாங் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த நீர்மூழ்கிக் குண்டு வெடித்ததில் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியது.
அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே பிலிப்பைன்ஸில் கடற்போர் இடம்பெற்றது.

1945 : ஜப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைந்ததை தொடர்ந்து சீனக் குடியரசு தைவானை இணைத்துக் கொண்டது.

1949 : தைவான் ஜலசந்தியில் குனிங்டூ போர் தொடங்கியது.

1954 : கோவாவில் அன்னிய ஆட்சியை எதிர்த்து சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது.

1962 : கியூபா ஏவுகணை நெருக்கடி :- சோவியத் ஏவுகணைகள் கியூபாவில் உள்ளதை காட்டும் புகைப்படங்கள் ஐநா பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் காண்பிக்கப்பட்டன.

1971 : இந்தியாவில் தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கமிட்டி அமைக்கப்பட்டது.

ஐ நாவில் இருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீனக் குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1973 : இஸ்ரேல்-எகிப்து இடையேயான யோம் கிப்பூர் போர் முடிவுக்கு வந்தது.

1976 : லண்டனில் தேசிய அரங்கம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

1986 : சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தென் ஆப்ரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டது.

1988 : டோனா மோலின் எனும் பிலிப்பைன்ஸ் கப்பல் சூறாவளியினால் கவிழ்ந்ததில் 450 பேர் உயிரிழந்தனர்.

2000 : இலங்கையில் பண்டாரவளை, பிந்துனுவேவா சிறைகள் மீது சிங்களவர்கள் நடத்தியத் தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

2001: விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.

இந்தியாவில் தடா சட்டத்துக்கு பதிலாக பொடா என்ற புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை அரசு கொண்டு வரப்பட்டது.
இதன் கீழ் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 23 தீவிரவாத அமைப்புகளுக்கு அரசு தடை விதித்தது.

2007 : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது இரட்டை அடுக்கு விமானம் ஏர்பஸ் ஏ 380 தனது முதலாவது சேவையை சிட்னிக்கு ஆரம்பித்தது.

2009 : பாக்தாத் நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 155 பேர் உயிரிழந்தனர்.
721 பேர் காயமடைந்தனர்.

2012 : கியூபா மற்றும் ஹைட்டியில் இடம்பெற்ற மழை, நிலச்சரிவில் 65 பேர் உயிரிழந்தனர்.

2017 : சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 வது தேசியப் பேராயத்தில் ஜீ ஜின்பிங் இரண்டாவது தடவையாக கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
👍2
அக்டோபர் 25.
பிக்காசோ.
(Pablo Picasso)

20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ 1881ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி ஸ்பெயினின் மலகாவில் பிறந்தார்.

ஜார்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.

தனது ஏழு வயதிலேயே ஒரு தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை வரைந்த இவர், தன் பதினான்கு வயது நிறைவடைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் நன்கு கற்றுக்கொண்டார்.

தன் வாழ்நாளில் பிக்காசோ 1885 சிற்பங்கள், 1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள், 12000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12000 திரைச்சீலை வேலைப்பாடுகள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை உருவாக்கியுள்ளார்.

அமைதிச்சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தியவர் பிக்காசோ தான். வரலாற்றில் தனக்கென்று நீங்காத தனி இடத்தைப் பிடித்த பிக்காசோ தனது 91வது வயதில் (1973) மறைந்தார்.
அக்டோபர் 25.
சர்வதேச கலைஞர்கள் தினம்.

கலைஞர்களையும் அவர்களின் அனைத்து பங்களிப்புகளையும் கெளரவிக்கும் வகையில் சர்வதேச கலைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஓவியர், சிற்பி, பீங்கான் கலைஞர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்ட ஸ்பானிஷ் கலைஞரான பாப்லோ பிக்காசோவை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாளான அக்டோபர் 25ல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது,

கலைஞர்கள் சமூகத்திற்கு வழங்கிய பங்களிப்புகளை கொண்டாடும் வகையில் கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞரான கிறிஸ் மேக்ளூர் 2004 ம் ஆண்டு சர்வதேச கலைஞர்கள் தினத்தைத் தொடங்கினார்.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25 ந் தேதி சர்வதேச கலைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 25, 1924.

இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டிஷ் அரசினால் சிறைப்பிடிக்கப்பட்ட நாள்.

தமது வாழ்நாளில் இருபது ஆண்டுக் காலத்தில் நேதாஜி 11 முறை கைது செய்யப்பட்டார். அதில் முதலாவது 1921ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் அவரது ஆதரவாளர்களோடு கைது செய்யப்பட்டார்.

அப்போது நேதாஜி ஒரு காங்கிரஸ்காரர். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை ஆக்ரோஷமாக வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது.

கைது செய்யப்பட நேதாஜியும் அவரது ஆதரவாளர்களும் பர்மாவின் மண்டலாய் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த மண்டலாய் சிறையானது அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையைப் போன்றது. வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகளை அந்தமான் அல்லது மண்டலாய் சிறைகளுக்கு அனுப்புவது ஆங்கிலேய அரசின் வழக்கமாய் இருந்தது.

மண்டலாய் சிறையில் தனது முதலாம் சிறைவாசத்தில் போஸ் கடுமையாக நோய் வாய்ப்பட்டார். அதன் காரணமாக மூன்று மாத காலத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அக்டோபர் 25, 1940.

டாம் & ஜெர்ரி முதலாம் கார்ட்டூன் படம் வெளியான தினம் இன்று.

வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பார்பரா என்ற இரண்டு அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

வால்ட் டிஸ்னி தயாரித்த மிக்கி மவுஸ் கார்ட்டூன் படத்துடன் போட்டியிட்டு இப்படம் கார்ட்டூன் படத்துக்கான ஆஸ்கார் பரிசினை வென்றது.

இன்றளவும் உலகம் முழுவதும் குழந்தைகளும் மற்றும் குழந்தை உள்ளம் கொண்ட பெரியவர்களும் பார்த்து சிரித்து மகிழ்வது இந்த கார்ட்டூன் படங்களைத்தான்.
வரலாற்றில் இன்று.
26 அக்டோபர் 2025-ஞாயிறு.


740 : கான்ஸ்டாண்டிநோபிள் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

1341 : ஆறாம் ஜார்ஜ் பைசன்டைன் தன்னை பேரரசராக அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1377 : பொஸ்னியாவின் முதலாவது மன்னராக ட்விட்கோ முடிசூடினார்.

1520 : ரோமப் பேரரசராக ஐந்தாம் சார்லஸ் முடிசூடினார்.

1640 : ஸ்காட்லாந்துக்கும், இங்கிலாந்துக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

1689 : ஆஸ்திரியாவின் ராணுவத் தலைவர் பிக்கலோமினி காலரா நோய் பரவாமல் தடுக்க ஸ்கோப்ஜி நகரை எரித்தார்.
இறுதியில் அவரே காலராவால் இறந்தார்.

1776 : அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு வேண்டி பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்சுக்கு பயணமானார்.

1825 : நியூயார்க்கில் ஈரி கால்வாய் திறக்கப்பட்டது.

1859 : வடக்கு வேல்ஸில் ராயல் சார்ட்டர் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 459 பேர் உயிரிழந்தனர்.

1863 : உலகின் மிகப் பழமையான கால்பந்து சங்கம் லண்டனில் அமைக்கப்பட்டது.

1905 : நார்வே, ஸ்வீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1909 : முன்னாள் ஜப்பான் பிரதமர் ஹிட்டா ஹிரோபூமி கொரிய தேசியவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1912 : முதலாம் பால்கன் போர் :- உஸ்மானியரால் ஆக்கிரமிக்கப்பட்ட தெசலோனிக்கி நகரம் விடுவிக்கப்பட்டு கிரேக்கத்துடன் இணைக்கப்பட்டது.
இதே நாளில் செர்பியப் படைகள் ஸ்கோப்ஜே நகரைக் கைப்பற்றின.

1917 : முதலாம் உலகப் போர் :- இத்தாலிப் படைகள் ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜெர்மனிப் படைகளுடன் மோதி பெரும் இழப்பை சந்தித்தன.
பிரேஸில் மைய நாடுகளுக்கு எதிராக போரில் இறங்கியது.

1934 : அகில இந்திய கிராமத் தொழில் சங்கம் காந்தியின் ஆதரவுடன் துவக்கப்பட்டது.

1936 : ஹூவர் அணையில் முதல் மின்சார ஜெனரேட்டர் முழு செயல்பாட்டுக்கு வந்தது.

1942 : இரண்டாம் உலகப் போர் :- சாண்டா குரூஸ் தீவுகளில் இரண்டு அமெரிக்க வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

1947 : ஜம்மு-காஷ்மீர் மகாராஜா இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க சம்மதித்தார்.

ஈராக்கிலிருந்து பிரிட்டன் ராணுவம் வெளியேறியது.

1956 : ரஷ்ய ராணுவம் ஹங்கேரியை முற்றுகையிட்டது.

1958 : பான் அமெரிக்கன் ஏர்வேஸ் போயிங் 707 முதலாவது வணிக நோக்குப் பயணத்தை நியூயார்க் முதல் பாரிஸ் வரை மேற்கொண்டது.

1966 : அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பல் வளைகுடாவில் தீப்பிடித்ததில் 43 பேர் இறந்தனர்.

1967 : முகமது ரெசா பஹ்லவி ஈரானின் பேரரசராக தன்னை அறிவித்து பேரரசியாக தனது மனைவி பாராவுக்கு முடி சூட்டினார்.

1977 : பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார்.

1979 : தென்கொரிய ஜனாதிபதி பார்க் சுங்-ஹீ ராணுவத் தளபதி கிம்ஜே- கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1980 : தமிழக கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

1985 : அமெரிக்காவில் இடம்பெற்ற சூறாவளியில் 97 பேர் உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலிய அரசு உலுரு மலையின் உரிமையை உளளூர் பழங்குடியினரிடம் அளித்தது.

1989 : தைவானில் சீனா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 54 பேரும் உயிரிழந்தனர்.

1991 : யூகோஸ்லோவிய மக்கள் ராணுவம், ஸ்லோவேனியாவிலிருந்து விலகியது.

1994 : ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
46 வருட போர் முடிவுக்கு வந்தது.

1995 : இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிணக்கு :- இஸ்லாமிய ஜிஹாத் தலைவர் பாத்தி ஷாகாக்கி மால்டாவில் உள்ள விடுதியில் மொசாட் அமைப்பினரால் கொல்லப்பட்டார்.

2001 : அமெரிக்கா தேசப்பற்று சட்டத்தை இயற்றியது.

2002 : மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் தீவிரவாதிகளால் 3 நாட்களாக பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது.
150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

2003 : கலிபோர்னியாவில் இடம்பெற்ற தீயில் 15 பேர் கொல்லப்பட்டு 2,50,000 ஏக்கர் மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்தன.

2012 : மேற்கு பர்மாவில் இடம்பெற்ற குழு மோதல்களில் 64 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் மேமானாவில் மசூதி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுவெடிப்பில் 41 பேர் உயிரிழந்தனர்.

2015 : 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆப்காஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை தாக்கியதில் 398 பேர் உயிரிழந்தனர்.
2,536 பேர் காயமடைந்தனர்.

2016 : இத்தாலியின் நடுப்பகுதியை 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.

2017 : இந்தோனேஷியாவின் டாங்கே ராங்கில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 44 பேர் உயிரிழந்தனர்.

பப்புவா நியூகினியாவில் ஐடேப் அருகே 6,000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது.

2019 : ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் பாரம்பரிய உலுரு மலையில் பொதுமக்கள் ஏறுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது.
👍2
வரலாற்றில் இன்று.

27 அக்டோபர் 2025-திங்கள்.

939 : இங்கிலாந்தின் மன்னராக முதலாம் எட்மண்ட் முடிசூடினார்.

1275 : நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரம் அமைக்கப்பட்டது.

1644 : இங்கிலாந்து உள்நாட்டுப் போர் :- நியூபரியில் இரண்டாம் முறை போர் இடம்பெற்றது.

1682 : பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது.

1806 : பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர்.

1810 : மேற்கு புளோரிடாவில் முன்னாள் ஸ்பானிஷ் குடியேற்றங்களை அமெரிக்கா இணைத்துக் கொண்டது.

1867 : கரிபால்டியின் படைகள் ரோம் நகரினுள் நுழைந்தன.

1870 : 1,40,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்ஸ் நகரில் இடம்பெற்ற போரில் புருஷியாவிடம் சரண் அடைந்தனர்.

1891 : ஜப்பானில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 7,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

1904 : முதலாவது சுரங்க நியூயார்க் நகர சப்வே பாதை திறக்கப்பட்டது.
இது உலகின் மிகப்பெரிய சுரங்கப் பாதைகளில் ஒன்றாகும்.

1907 : ஹங்கேரியில் செர்னோவா என்ற இடத்தில் கிறிஸ்தவக் கோவில் வழிபாட்டின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

1914 : முதலாம் உலகப்போரில் பிரிட்டன் கடற்படை முதலாவது தோல்வியை சந்தித்தது.
ஓடாசியஸ் என்ற போர்க்கப்பல் அயர்லாந்தின் வடமேற்கே ஜெர்மனியின் கண்ணிவெடித் தாக்குதலில் மூழ்கியது.

1922 : தென்னாப்ரிக்க ஒன்றியத்தில் இணைய ரொடீஷியாவில் இடம்பெற்ற பொதுவாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.

1924 : உஸ்பெக் சோவியத் குடியரசு சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.

1936 : திருமதி வாலிஸ் சிம்ப்சன் மணமுறிவு பெற்றார்.
இது அவருக்கு இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றியைத் திருமணம் புரிய வழிவகுத்தது.
இத்திருமணத்தால் எட்டாம் ஹென்றி முடிதுறக்க நேரிட்டது.

1947 : காஷ்மீரிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற இந்தியப் படையணி ஸ்ரீநகர் போய் சேர்ந்தது.

1951 : கனடாவில் விக்டோரியா மருத்துவமனையில் கோபால்ட் கதிரியக்க சிகிச்சைப் பிரிவு முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.

1958 : பாகிஸ்தானின் முதலாவது ஜனாதிபதி ஸ்காண்டர் மிர்ஸா ராணுவப் புரட்சியால் பதவியிலிருந்து அகற்றப்பட்டு ராணுவத் தலைவர் அயூப்கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1959 : மெக்ஸிகோவில் இடம்பெற்ற சூறாவளியில் 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1962 : கியூபா ஏவுகணை நெருக்கடி :- கியூபாவில் அமெரிக்காவின் யூ-2 விமானம் சோவியத் தயாரிப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1971 : காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஜைர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1973 : 1.4 கி.கி. விண்கல் கொலராடோவின் கேனன் நகரைத் தாக்கியது.

1979 : செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடீன்ஸ் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.

1981 : பனிப் போர் :- சோவியத் நீர்மூழ்கி ஒன்று ஸ்வீடனின் கிழக்குக் கரையில் மூழ்கியது.

1982 : யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல்நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

1990 : இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தை தாயகமாக கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.

1991 : துருக்மெனிஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

1997 : கோவை அருகே சுற்றுலா வேனும் ஜீப்பும் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

1999 : ஆர்மீனியாவின் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

2005 : பாரிஸில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.

2007 : காங்கோவில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 30 பேர் உயிரிழந்தனர்.
100 பேர் காயமடைந்தனர்.

2012 : ஈராக்கில் தொடர்ச்சியான குண்டு தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.

2013 : ஈராக், பாக்தாத்தில் தொடர் கார் குண்டுவெடிப்பில் 38 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் சாலையோர குண்டு வெடிப்பில் 18 பேர் உயிரிழந்தனர்.

2014 : 2002 ஜூன் 20 ல் ஆரம்பிக்கப்பட்ட ஹெரிக் ராணுவ நடவடிக்கையை முடித்துக்கொண்டு பிரிட்டிஷ் ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது.

2017 : கட்டலோனியா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

2018 : பிட்ஸ்பர்க் ஜெப ஆலயத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
6 பேர் காயம் அடைந்தனர்.
👍1
அக்டோபர் 27.
இந்திய காலாட்படை தினம்.

இந்திய காலாட்படை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 அன்று கொண்டாடப்படுகிறது. 

ஸ்ரீநகரில் முதல் இந்தியப் படையினர் தரையிறங்கி, பாகிஸ்தானால் ஆதரிக்கப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போரிட்டதைக் குறிக்கும் வகையில் இந்த நாள் நினைவு கூறப்படுகிறது.
👍3
அக்டோபர் 28, 1886.

அமெரிக்கப் புரட்சியின்போது, அமெரிக்கா-ஃப்ரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கிடையே நிலவிய நட்புறவின் அடையாளமாகத் திகழும் சுதந்திர தேவி சிலை நியூயார்க்கில் திறந்துவைக்கப்பட்ட நாள்.

சிலையின் தலையிலுள்ள மகுடம் சூரியனின் வடிவத்தையும், அதன் 7 முனைகள் 7 கடல்கள்,
7 கண்டங்கள் ஆகியவற்றையும், கையிலிருக்கும் தீப்பந்தம் விடுதலை ஒளியேற்றுவதையும் குறிக்கின்றன.
👍1
அக்டோபர் 28, 1492.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற இத்தாலியைச் சேர்ந்த இவர் அமரிக்காவைக் கண்டுபிடித்த தினம் இன்று.

அவர் கரை சேர்ந்த இடம் க்யூபா. அவர் அதற்கு பல நாட்கள் முன்னரே (அக்டோபர் 12) பஹாமாஸ் தீவினை அடைந்தபோதிலும் அங்கு மனிதர்கள் யாரையும் அவர் காணாததினால் தான் ஒரு புதிய உலகினை அடைந்திருக்கிறோம் என்பதனை அப்போது அவர் உணரவில்லை.

க்யூபாவில் அவர் அங்கு வாழ்ந்துவந்த பூர்வீக இன மக்களைக் கண்டார்.

தனது கப்பல்களில் இருந்த குல்லாய்கள் மற்றும் உணவுப் பொருட்களை அவர்களுக்கு பரிசாக அளித்தார். மகிழ்ச்சி அடைந்த அவர்களும் தங்களிடமிருந்த பவளங்கள் மற்றும் பவள மாலைகளை கொலம்பஸுக்கும் உடன் வந்த மாலுமிகளுக்கும் பரிசாக அளித்தனர்.
👍1
அக்டோபர் 28.
சர்வதேச அனிமேஷன் தினம்.

அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக 'சர்வதேச அனிமேஷன் தினம்' கொண்டாடப்படுகிறது.

1892ல் சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் முதன்முதலில் கிரெவின் மியூசியத் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவுகூறும் விதமாக சர்வதேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது.

UNESCO வின் ஒரு அங்கமான, சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் (International Animated Film Association - ASIFA), 2002ல் இந்நாளை அறிமுகப்படுத்தியது.
👍1
வரலாற்றில் இன்று.
28 அக்டோபர் 2025-செவ்வாய்.


306 : மாக்செண்டியஸ் ரோமப் பேரரசர் ஆனார்.

312 : முதலாம் கான்ஸ்டன்டைன் மாக்செண்டியஸைத் தோற்கடித்து ரோமப் பேரரசர் ஆனார்.

1420 : பெய்ஜிங் அதிகாரபூர்வமாக மிங் அரசின் தலைநகரானது.

1449 : முதலாம் கிறிஸ்டியன் டென்மார்க்கின் அரசராக முடிசூடினார்.

1492 : கடல் பயண ஆய்வாளர் கொலம்பசும் அவரது கூட்டத்தினரும் தனது முதலாவது பயணத்தின்போது வழி தவறி சென்றதால் கியூபா கண்டுபிடிக்கப்பட்டது.

1707 : ஜப்பானில் ஹொன்சூ, சிகொக்கு, கியூசூ ஆகிய இடங்களில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1746 : பெருவில் ஏற்பட்ட பூகம்பத்தால் 18 ஆயிரம் பேர் இறந்தனர்.

1834 : மேற்கு ஆஸ்திரேலியாவில் பிஞ்சாரா என்ற இடத்தில் பிரிட்டிஷ் குடியேறிகளால் 30 நூங்கர் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

1886 : நியூயார்க்கில் அதிபர் குரோவர் கிளீவ்லாண்ட் சுதந்திரதேவி சிலையை திறந்து வைத்தார்.

1891 : ஜப்பானில் நோபி சமவெளியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 7,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1904 : பனாமாவும் உருகுவேவும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.

1918 : ஆஸ்திரியா- ஹங்கேரியிடமிருந்து செக்கோஸ்லோவாகியா விடுதலையை அறிவித்தது.

முதலாம் உலகப் போர் :- 300 ஆண்டுகள் ஆக்கிரமிப்பை அடுத்து புதிய போலந்து அரசு மேற்கு கலீசியாவில் உருவானது.
இதையடுத்து போலந்து உக்ரைனியப் போர் ஆரம்பமானது.

1922 : முசோலினி தலைமையில் இத்தாலி பாசிஸ்டுகள் ரோம் நகரை சென்றடைந்து இத்தாலி அரசைக் கைப்பற்றினர்.

1940 : இரண்டாம் உலகப் போர் :- இத்தாலியின் காலக் கெடுவை கிரேக்கம் ஏற்க மறுத்ததை அடுத்து கிரேக்க-இத்தாலி போர் ஆரம்பமானது.
இத்தாலி கிரேக்கத்தை அல்பேனியா வழியாக ஊடுருவியது.

1941 : லிதுவேனியாவின் கௌனாஸ் என்ற இடத்தில் நாஜி ஜெர்மனியர் 9 ஆயிரம் யூதர்களை சுட்டுக் கொன்று அதே இடத்தில் புதைத்தனர்.

1942 : கனடா முதல் அலாஸ்கா வரையான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

போலந்தின் கிராக்கொவ் நகரில் இருந்து 2,000 சிறுவர்களும் 6 ஆயிரம் பெரியவர்களும் நாஜிகளின் வதை முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

1949 : ஏர் பிரான்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 48 பேரும் உயிரிழந்தனர்.

1962 : கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது. சோவியத் பிரதமர் நிகிடா குருசேவ் சோவியத் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்ற உத்தரவிட்டார்.

1986 : சுதந்திர தேவி சிலையின் நூற்றாண்டு விழா நியூயார்க் துறைமுகத்தில் கொண்டாடப்பட்டது.

1990 : ஜார்ஜியாவின் வரலாற்றில் முதல் தடவையாக பல கட்சி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.

1995 : அஜர்பைஜான் தலைநகர் பக்கூவில் சுரங்க ரயில் பாதையில் ஏற்பட்ட தீவிபத்தில் 229 பேர் உயிரிழந்தனர்.

2001 : பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் சுட்டதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

2006 : விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 8 மாதங்களாக தடைபட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாகின.

1930 களில் சோவியத் போல்செவிக் கம்யூனிஸ்ட்களால் உக்ரைனின் பைகிவ்னியா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரைனியர்களின் இறுதிக் கிரியைகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.

2009 : பாகிஸ்தான், பெஷாவர் நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 117 பேர் உயிரிழந்தனர்.
213 பேர் காயமடைந்தனர்.

2014 : நாசாவின் சிக்னஸ் ஆளில்லா விண்கலம் வர்ஜீனியாவில் இருந்து புறப்பட்ட சில நிமிட நேரத்தில் வெடித்து சிதறியது.

2017 : சோமாலியாவில் இரட்டை கார் குண்டு வெடிப்பில் 27 பேர் உயிரிழந்தனர்.
👍1
வரலாற்றில் இன்று.
29 அக்டோபர் 2025-புதன்.


969 : பைசண்டைன் படையினர் சிரியாவின் அந்தியோக்கியா நகரைக் கைப்பற்றினர்.

1390 : மந்திரவாதிகளுக்கு எதிரான முதலாவது வழக்கு பாரிஸில் இடம் பெற்றது.
வழக்கின் இறுதியில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1422 : ஏழாம் சார்லஸ் பிரான்ஸின் மன்னராக முடிசூடினார்.

1665 : போர்ச்சுகீஸ் படையினர் காங்கோப் பேரரசை தோற்கடித்து அதன் மன்னர் முதலாம் அந்தோணியோவைக் கொன்றனர்.

1832 : பெங்களூரில் நிலைகொண்டிருந்த பிரிட்டிஷ் படையினருக்கு எதிராக நடத்தப்பட இருந்த சிப்பாய்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.

1863 : ஜெனீவாவில் கூடிய 18 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்க தீர்மானித்தனர்.

1886 : ஆங்கிலேய அரசுக்கும் திருவாங்கூர் மன்னருக்கும் இடையே முல்லைப் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது.

1901 : அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லியைக் கொலை செய்த குற்றத்திற்காக லியோன் சோல்கோஸ் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1913 : எல் சல்வடோரில் பெரும்வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.

1914 : உஸ்மானியப் பேரரசு முதலாம் உலகப் போரில் இறங்கியது.

1917 : ரஷ்யாவில் 8 மணி நேர வேலைத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

1919 : வாஷிங்டனில் முதல் அகில உலகத் தொழிலாளர்கள் மாநாடு ஆரம்பமானது.

1922 : பெனிட்டோ முசோலினி இத்தாலியின் பிரதமராக மூன்றாம் விக்டர் இமானுவெல் மன்னரால் நியமிக்கப்பட்டார்.

1923 : துருக்கி குடியரசு நாடானது.

1932 : பிரெஞ்சு சொகுசுக் கப்பல் நார்மண்டி மிதக்க விடப்பட்டது.

1944 : இரண்டாம் உலகப் போர் :- சோவியத் செஞ்சேனை ஹங்கேரியை அடைந்தது.

1948 : கலிலேயாவில் சாஃப்சாஃப் என்ற கிராமம் ஒன்றில் புகுந்த இஸ்ரேலியர்கள் 70 பாலஸ்தீனர்களை சுட்டுக்கொன்றனர்.

1950 : பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதன்முறையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.

1956 : சூயஸ் நெருக்கடி ஆரம்பம் :- இஸ்ரேலியப் படையினர் சினாய் தீபகற்பத்தைக் கைப்பற்றி எகிப்தியப் படைகளை சூயஸ் கால்வாய் நோக்கி விரட்டினர்.

1960 : அமெரிக்கா, ஒஹியோவில் விமானம் ஒன்று விழுந்ததில் 22 பேர் உயிரிழந்தனர்.

1961 : ஐக்கியக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது.

1964 : பல வெகுமதி மிக்க ரத்தினக்கற்கள் நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டன.

டங்கனிக்கா மற்றும் சான்சிபார் இரண்டும் இணைந்து தான்சானியா குடியரசு ஆகியது.

1967 : மாண்ட்ரீல் நகரில் 50 லட்சம் பேர் கண்டுகளித்த எக்ஸ்போ -67 உலகக் கண்காட்சி நிறைவடைந்தது.

1971 : இந்திய கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கட்டாக் அருகே வீசிய கடும் புயலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

1983 : துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,300 பேர் உயிரிழந்தனர்.

1987 : உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியதாக அறிவிக்கப்பட்டது.

1998 : 39 பேருடன் சென்ற துருக்கி விமானம் ஒன்று குர்தியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.

அமெரிக்காவில் HD தரத்தில் தொலைக்காட்சி வெளியானது.

டிஸ்கவரி விண்ணோடம் 77 வயது ஜான் கிளென் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1999 : ஒடிசாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 10,000 பேர் வரை இறந்தனர்.

2002 : வியட்நாமின் ஹோ ஷி மின் நகரில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீவிபத்தில் 60 பேருக்கு மேல் பலியானார்கள்.

2004 : வர்த்தக மையக் கட்டிடத் தாக்குதலுக்கு தானே காரணம் எனக் கூறும் ஒசாமா பின்லேடனின் வீடியோ வெளியானது.

2005 : டில்லியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 60 பேர் வரை கொல்லப்பட்டனர்.

2012 : அமெரிக்காவின் கிழக்குக் கரையை சூறாவளித் தாக்கியதில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

2015 : 35 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரு குழந்தை கொள்கையை கைவிடுவதாக சீனா அறிவித்தது.
👍21
வரலாற்றில் இன்று.
30 அக்டோபர் 2025-வியாழன்.

1485 : ஏழாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.

1502 : வாஸ்கோடகாமா இரண்டாம் முறையாக கோழிக்கோடு வந்தார்.

1817 : வெனிசுலாவில் சுதந்திர அரசு ஒன்றை சிமோன் பொலிவார் அமைத்தார்.

1831 : அமெரிக்காவில் அடிமை முறைக்கு எதிராக கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டார்.

1863 : டென்மார்க் இளவரசர் வில்லியம் முதலாம் ஜார்ஜ் என்ற பெயரில் கிரேக்க மன்னராக முடிசூடும் நோக்குடன் ஏதென்ஸை சென்றடைந்தார்

1864 : தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஹெலேனா குடியேற்ற நாடு நிறுவப்பட்டது.

1905 : ரஷ்யப் பேரரசர் இரண்டாம் நிகோலஸ் முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினார்.

1918 : உஸ்மானியப் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

1920 : ஆஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.

1925 : ஜான்லோகி பைர்ட் பிரிட்டனின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பை அமைத்தார்.

1941 : மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாஜிக்களால் பெல்செக் வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

1945 : இந்தியா ஐநாவில் இணைந்தது.

1956 : இந்தியாவின் முதல் ஐந்து நட்சத்திர டீலக்ஸ் ஹோட்டலான அசோக் ஹோட்டல் டெல்லியில் திறக்கப்பட்டது.

1960 : முதல் சிறுநீரக தானம் பிரிட்டனில் அளிக்கப்பட்டது.

1961 : சோவியத் ஒன்றியம் 50 மெகா டன் அளவுள்ள சார் வெடிகுண்டு என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது.
இதுவே இந்நாள்வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.

ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

1964 : இலங்கையின் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா- சாஸ்திரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

1970 : வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் உயிரிழந்தனர்.
2 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

1972 : சிகாகோவில் இரண்டு பயணிகள் ரயில் மோதியதில் 45 பேர் உயிரிழந்தனர்.

1973 : ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பொஸ்போரஸ் பாலம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைக்கப்பட்டது.

1983 : 7 ஆண்டுகள் ராணுவ ஆட்சியின் பின்னர் அர்ஜென்டினாவில் முதன் முறையாக தேர்தல் இடம்பெற்றது.

1985 : சேலஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.

1991 : மத்திய கிழக்கு அமைதி மாநாடு மாட்ரிட் நகரில் ஆரம்பமானது.

1995 : கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 46.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.

2001 : இலங்கை பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் இறந்தனர்.
15 பேர் காயமடைந்தனர்.

2006 : பாகிஸ்தானின் எல்லையோரத்தில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜெனீவாவில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்தன.

2014 : பாலஸ்தீன நாட்டை ஸ்வீடன் அங்கீகரித்தது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இதுவாகும்.

2015 : ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இரவு விடுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 64 பேர் உயிரிழந்தனர்.
147 பேர் காயமடைந்தனர்.
அக்டோபர் 30, 1945.
ஐ. நா. சபையில் இந்தியா சேர்ந்தது.

ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது என்பது ஒரு பன்னாட்டு அமைப்பு.

உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன.

இது வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது.
இச்சபையில் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன.

அது துவக்கப்பட்ட ஒரு சில நாட்கள் கழித்து அக்டோபர் 30ம் நாள் 1945 ல் இந்தியா ஐநாவில் இணைந்தது.
அக்டோபர் 30.
முத்துராமலிங்கத் தேவர்.

பசும்பொன் தேவர்
சுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதியான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1908ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பிறந்தார். இவர் சொந்த முயற்சியில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.

முதுகுளத்தூர் அடுத்த சாயல்குடியில், விவேகானந்தர் பெயரில் தொடங்கப்பட்ட நூலகத் திறப்பு விழா 1933-ல் நடந்தது. தலைமைப் பேச்சாளர் வராததால், இவரைப் பேச அழைத்தனர். மேடையேற்றம் இவருக்கு முதல்முறை. ஆனால், விவேகானந்தரின் தத்துவங்கள் பற்றி 3 மணி நேரம் மடைதிறந்த வெள்ளம்போலப் பேசி, பாராட்டு பெற்றார்.

காங்கிரஸில் இருந்து 1948-ல் விலகிய இவர், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். நேதாஜி என்ற வாரப் பத்திரிக்கையை தொடங்கினார். இவர் தேர்தலில் வெற்றி பெற்று மதராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

விடுதலைக்காக போராடிய முத்துராமலிங்கத் தேவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு 55-வது வயதில் (1963) தனது பிறந்த நாளன்றே மறைந்தார்.
3
2025/10/31 02:13:18
Back to Top
HTML Embed Code: