Telegram Web Link
⚪️🔴'ஐயோ பாவம்' என்று விட்டுவிடக்கூடாது: பாஜக

வாசன் என்ற ஒரு நபர் நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலையில் மிக விரைவாக தன் இரு சக்கர வாகனத்தை செலுத்தியதோடு பல்வேறு சாகசங்களை செய்வதாக எண்ணிக்கொண்டு பல்வேறு வாகனங்களுக்கு இடையூறு செய்ததோடு, பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அத்துமீறி நடந்து கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் காயமடைந்துள்ளார் என்று 'ஐயோ பாவம்' என்று நின்று விடாமல், பொது மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் வகையில் வாகனத்தை செலுத்தியதற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

நாராயணன் திருப்பதி, செய்தித்தொடர்பாளர், பாஜக

இதற்கிடையே, யூடியூபர் டிடிஎப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிடிஎப் வாசன் சாகசம் செய்ய முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவர் காயமடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

- @u7news
👍2👏2😁1
⚪️🔴நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்:

தேசத்தின் வளர்ச்சிப் பணியில் நாட்டு மக்கள் தொடர்ந்து வியர்வை சிந்தி வருகின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு நாம் விடை கொடுக்க உள்ளோம்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சென்றாலும், இந்த கட்டடமும் நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படும்.

இந்தியா முழுவதும் மாற்றத்திற்கான அலை உருவாகியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால செயல்பாடுகள் குறித்து பெருமிதம் கொள்கிறேன்.

G20 மாநாட்டின் வெற்றி இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் சொந்தம்.

நாம் முன் வைத்த பிரகடனத்தை G20 நாடுகள் ஏற்றுக்கொண்டது இந்தியாவின் பலத்தை காட்டுகிறது.

சுதந்திர போராட்டத்தின் சின்னமாக பழைய நாடாளுமன்றம் திகழ்கிறது.

சுதந்திர இந்தியாவின் பல்வேறு பாரம்பரியங்களின் நினைவாக பழைய நாடாளுமன்றம் உள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன.

மேலும் சுயதன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்ற G20 மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்கது.

- @u7news
👍1
⚪️🔴மாஸ் காட்ட நினைத்து..;மாவுகட்டு போட்டுக் கொண்ட மஞ்சள் வீரன்.....!

❗️முழு விவரம்❗️: https://u7news.blogspot.com/2023/09/Thinking-of-showing-mass-the-yellow-hero-wearing-a-flour-bandage.html

-
@u7news
😁4👍1
⚪️🔴பழசு தான் ஆனா புதுசா தேவைப்படுகிறது....

தமிழக சுகாதாரத்துறை சார்பில் டெங்கு ஒழிப்புக்காக வெளியிடப்பட்டுள்ள குறும்படம்.

விவேக் நடித்த இந்த குறும்படம் பழையது என்றாலும் மீண்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

டெங்கு ஒழிப்பில் கவனம் கொள்வோம் விழிப்புணர்வாக இருப்போம்- தமிழக சுகாதாரத்துறை.

- @u7news
👍2
⚪️🔴திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவக்கம்

கருடன் படத்துடன் கூடிய கொடி கோவில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது

- @u7news
⚪️🔴கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம்

kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் துவக்கம்

ஆதார் எண்ணை உள்ளீடு செய்து OTP வைத்து விவரங்களை பெறலாம்

- @u7news
⚪️🔴சேலம்: மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியில் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற இரு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

செந்தில் என்பவரின் மகன் சந்தோஷ் (14), சிவராமன் என்பவரின் மகன் நந்தகுமார் (14) இருவரின் சடலங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை

- @u7news
⚪️🔴உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றமும் தடை விதித்துள்ளது

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பில் தலையிட முடியாது.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை, நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்பது சரியே-மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

- @u7news
⚪️🔴பட்ஜெட் விலையில் விவோ 5G ஸ்மார்ட்போன்:

கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விவோ நிறுவனம் தனது பட்ஜெட் பிரீமியம் ஸ்மார்ட்போனான விவோ டி2 ப்ரோ 5ஜி செப்டம்பர் 22ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனில், 6.7இன்ச் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 64எம்பி மெயின் கேமரா, 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.

செல்பிக்காக 16எம்பி முன்பக்க படக்கருவி கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர 66W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4200mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் விரைவாக போனை சார்ஜ் செய்ய முடியும்.

விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர 5ஜி பேண்ட்கள், வை-பை, ப்ளூடூத், டைப் சி சப்போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

விலையை பொறுத்தவரையில் ரூ.20ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படலாம்.

• THE U7NEWS • TELEGRAM
• JOIN US: https://www.tg-me.com/u7news
👍1
⚪️🔴ரயில்வேயில் 10ம் வகுப்பு தகுதிக்கு வேலை: ரூ.20ஆயிரம் சம்பளம்..!

வட மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Sports Persons பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : வட மேற்கு ரயில்வே

பதவி : Sports Persons

காலியிடங்கள்: 54

கல்வித்தகுதி : 10th, 12th, ITI, B.Sc, Any Degree, Graduate

வயது வரம்பு : 18-25

சம்பளம் : ரூ.5,200-20,200

பணியிடம் : Ajmer, Bikaner, Jaipur, Jodhpur

தேர்வு முறை: தகுதி, ஆவண சரிபார்ப்பு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தேர்வு கட்டணம் : All Other Candidates - Rs.500/-

SC/ST/Women/Minorities/ EBC Candidates - Rs.250/- Mode of payment: Online
கடைசி தேதி : அக்டோபர் 15,2023

இணையதள முகவரி : https://nwr.indianrailways.gov.in/

• THE U7NEWS • TELEGRAM
• JOIN US: https://www.tg-me.com/u7news
⚪️🔴உலக நாடுகளில் கடைசி இடத்தை பிடித்த இந்தியா... எதில் தெரியுமா?

உலகிலேயே அதிக விவாகரத்தை பெறும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்தியா மிகக் குறைந்த சதவீதத்துடன் கடைசி இடத்தை பிடித்திருப்பது இந்திய நெட்டிசன்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் விவாகரத்து சதவீதம் 1% ஆக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் வியட்நாம் உலகிலேயே விவாகரத்து குறைவாக பெறும் இரண்டாவது நாடாக இருக்கிறது.

இருப்பினும் இங்கு 100-இல் 7 திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக தகவல் தெரிவிக்கின்றன.

உலகிலேயே அதிக விவகாரத்தை பெறும் நாடாக ஐரோப்பா நாடான போர்ச்சுக்கல் மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு 94 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் நாட்டில் விவாகரத்து சதவீதம் 85 ஆக உள்ளது. இதேபோன்று பின்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்டவைகளிலும் விவாகரத்து ஆகும் சதவீதம் 50% யை தாண்டி உள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் 50 சதவீதம் பேர் விவாகரத்து செய்து கொள்வதாக தகவல் தெரிவிக்கிறது.

இவற்றையெல்லாம் ஒப்பிடும்போது இந்தியாவில் மிக மிக குறைந்த அளவுக்கே விவாகரத்து நடப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இதற்கு இந்திய சட்ட அமைப்புகளே முக்கிய காரணம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

• THE U7NEWS • TELEGRAM
• JOIN US: https://www.tg-me.com/u7news
👍1
⚪️🔴தமிழ் நாட்டில், 4 நாட்களில் 20 நபர்களால் 20 டன் கரும்புகளை கொண்டு உருவாக்கப்பட்ட விநாயக பெருமான்.

இப்படத்தை பெரிதாக்கி பாருங்கள் அதன் அழகை.

- @U7news
2
⚪️🔴JUST IN

TTF வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை.

மோட்டார் வாகன சட்டத்தின் படி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டியதாக T.T.Fவாசன் மீது வழக்குப்பதிவு

- @u7news
👍4👏1
⚪️🔴"எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்1 விண்கலம்"
சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கிய பாதையில் ஆதித்யா எல் 1 பயணிக்கிறது.


மேலும் 110 நாட்கள் பயணித்து சூரியனின் எல் 1 புள்ளியின் சுற்றுவட்டப்பாதையை அடையும்-இஸ்ரோ.

- @u7news
⚪️🔴நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் இன்று முதல் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குகிறது

நேற்று நாடாளுமன்ற பழைய கட்டிடத்திற்கு எம்பிக்கள் பிரியா விடை கொடுத்தார்கள்

கடந்த மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

- @u7news
⚪️🔴BREAKING || நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!

❗️முழு விவரம்❗️: https://u7news.in/actor-vijay-antonys-daughter-committed-suicide

-
@u7news
👍1
2025/10/31 03:57:50
Back to Top
HTML Embed Code: