வரலாற்றில் இன்று.
20 அக்டோபர் 2025-திங்கள்.
1567 : அக்பர் சிட்டகார் மீது படையெடுத்தார்.
1714 : முதலாம் ஜார்ஜ் பிரிட்டனின் மன்னராக முடிசூடினார்.
1774 : கல்கத்தாவைத் தலைநகராகக் கொண்டு புதியக் கம்பெனி அரசு ஆரம்பிக்கப்பட்டது.
1818 : அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் எல்லைப் பிரச்சனை முடிவுக்கு வந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
1822 : லண்டனில் சண்டே டைம்ஸ் செய்தித்தாளின் முதல் இதழ் வெளியானது.
1836 : ஜெர்மனியில் முதன் முதலாக நர்சுகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
1879 : பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகத்தில் முதன்முதலாக மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன.
1904 : சிலியும் பொலிவியாவும் தமது எல்லைகளை நிர்ணயிக்கும் அமைதி உடன்பாட்டை ஏற்றுக்கொண்டன.
1926 : கியூபாவில் இடம்பெற்ற சூறாவளியில் 600 பேர் உயிரிழந்தனர்.
1933 : பாலஸ்தீனப் பகுதியில் யூதர்கள் குடியேறத் தொடங்கியதைத் தொடர்ந்து அரபுகள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர்.
1937 : பாலஸ்தீனப் பகுதியில் யூதர்கள் குடியேறுவதற்கு பிரிட்டன் தடை விதித்தது.
1944 : இரண்டாம் உலகப்போர்:- சோவியத் ராணுவம் பெல்கிரேட் நகரை ஜெர்மனியிடம் இருந்து மீட்டது.
கிளீவ்லாந்து நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடித்ததில் 130 பேர் உயிரிழந்தனர்.
1947 : பாகிஸ்தானும் அமெரிக்காவும் தூதரக உறவை ஏற்படுத்தின.
1949 : ஆந்திரா, மசூலிப்பட்டினம் அருகே வீசிய கடும் புயலால் 800 பேர் உயிரிழந்தனர்.
3 லட்சம் வீடுகள் சேதமடைந்தன.
கென்யாவில் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது.
1956 : புவெர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1961 : சோவியத் ஒன்றியம் முதல் தடவையாக ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவும் நீண்ட தூரம் பாயும் ஏவுகணை சோதனை செய்தது.
1962 : சீனா இந்தியாவின் வட எல்லைத் தாக்கியது.
இந்திய சீனப் போர் ஆரம்பிக்க இது வழிவகுத்தது.
1973 : இரண்டாம் எலிசபெத் மகாராணி சிட்னி ஒபேரா மாளிகையைத் திறந்து வைத்தார்.
1976 : மிசிசிப்பி ஆற்றில் ஜார்ஜ் பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் உயிரிழந்தனர்.
18 பேர் மட்டும் உயிர் தப்பினர்.
1982 : இலங்கையில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
மாஸ்கோ, லூசினிக்கி அரங்கில் கால்பந்தாட்டப் போட்டியில் இடம்பெற்ற நெரிசலில் 66 பேர் உயிரிழந்தனர்.
1991 : உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் இடம்பெற்ற 6.8 அளவு நிலநடுக்கத்தில் 670 பேர் உயிரிழந்தனர்.
1998 : நைஜீரியாவில் பெட்ரோல் குழாய் வெடித்ததில் 600 பேர் பலியானார்கள்.
2001 : இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக் கட்சி தொடங்கப்பட்டது.
2004 : முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.
2011 : லிபிய உள்நாட்டுப் போர் :- கிளர்ச்சி படைகள் ஜனாதிபதி முஹம்மர் அல் கதாபியை சிர்ட்டே நகரில் படுகொலை செய்தனர்.
2013 : ஈராக், பாக்தாத்தில் நடந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் 37 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவின் ஹமாவில் வாகன தற்கொலை குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர்.
சூடானின் ஜொங்லேயில் 78 பேர் கால்நடை வளர்ப்பவர்களால் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் 20.
உலகப் புள்ளியியல் தினம்.
(World Statistics Day)
ஏழை, எளிய மக்களுக்காக அரசால் வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் புள்ளிவிவரங்களைச் சார்ந்தே உள்ளன.
பல்வேறு அரசுத்துறைகளிலும், பல்வேறு வகையான இடைநிலைப் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 20 ம் தேதியை உலகப்புள்ளியியல் தினமாக 2010 ம் ஆண்டில் அறிவித்தது.
புள்ளி விபரங்களின் வெற்றி மற்றும் சேவையைக் கொண்டாடுவதே இத்தினத்தின் நோக்கம்.

ஜேம்ஸ் சாட்விக்.
(James Chadwick)
நியூட்ரான் கண்டுபிடிப்பிலும், அணுக்கரு இயற்பியலிலும் பெரும் புகழ்பெற்ற சர் ஜேம்ஸ் சாட்விக் 1891ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.
இவர் 1923ம் ஆண்டு முதல் கேம்பிரிட்ஜில் உள்ள கேவெண்டிஷ் ஆய்வுக்கூடத்தில் ரூதர்ஃபோர்ட் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றினார். இருவரும் இணைந்து ஆல்ஃபா துகள்களைப் பயன்படுத்தி, சில தனிமங்களைச் சிதைத்து அவற்றை வேறு தனிமங்களாக மாற்றும் மாற்றுத் தனிமமாக்கல் (transmutation of elements) முறையை கண்டறிந்தனர்.
ஆல்ஃபா துகள்களால் தாக்கப் பெற்ற பெரீலியம் (beryllium) தனிமத்தில் இருந்து கதிர்வீச்சு (radiation) உண்டாவதை, 1932ம் ஆண்டு சாட்விக், மின்னேற்றம் பெறாத நடுநிலைத் துகள்கள் (neutral particles) என கண்டறிந்து அதற்கு நியூட்ரான்கள் என பெயரிட்டார். இக்கண்டுபிடிப்புகளுக்காகவே இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நியூட்ரான்களை வைத்து அணுகுண்டு செய்ய முடியும் என்ற அடிப்படையில் நியூட்ரான் குண்டு உருவாக்கப்பட்டது. சாட்விக், இக்கண்டுபிடிப்புக்காக 1932ல் ஹூக்ஸ் பதக்கம் (Hughes Medal) பெற்றார்.
அணுக்கருப் பிளவில் (nuclear fission) பயன்படும் தொடர் வினைகள் (chain reactions) பற்றியும் சாட்விக் ஆய்வு மேற்கொண்டார். ஓரகத் தனிமங்கள் எனப்படும் ஐசோடோப்புகள் பற்றி முதன் முதலில் ஆய்வு நடத்தியவரும் இவரே. அறிவியலில் இன்றும் பலருக்கு ஆர்வத்தையும், ஊக்கத்தையும் அளித்த இவர் 1974ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி மறைந்தார்.

21 அக்டோபர் 2025-செவ்வாய்.
1097 : முதலாம் சிலுவைப் போர் :- அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது.
1209 : நான்காம் ஒட்டோ ரோமப் பேரரசராக முடிசூடினார்.
1520 : மெகல்லன் சிலியில் புதிய ஜலசந்தி ஒன்றைக் கண்டுபிடித்தார்.
இது பின்னர் மெகல்லன் ஜலசந்தி எனப் பெயர் பெற்றது.
1802 : இந்தியாவில் தனிப்பட்டவர்கள் தபால் மூலம் பார்சல் அனுப்பும் முறை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1824 : இங்கிலாந்தில் ஜோசப் ஆஸ்ப்டின் போர்ட்லாண்ட் சிமெண்ட்டுக்கான காப்புரிமம் பெற்றார்.
1833 : இலங்கையின் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது.
1854 : புளோரன்ஸ் நைட்டிங்கேல் மற்றும் 38 செவிலியர்களுடன் கிரிமியன் போர்முனைக்கு அனுப்பப் பட்டார்.
1861 : அமெரிக்க உள்நாட்டுப் போர் :- அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வர்ஜீனியாவில் தோற்றனர்.
ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் எட்வர்ட் பேக்கர் கொல்லப்பட்டார்.
1863 : லண்டனில் முதன் முதலாக கால்பந்து சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1876 : யாழ்ப்பாணத்தில் காலரா வேகமாகப் பரவியது.
பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
1879 : தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான பல்பை பரிசோதித்தார்.
இது 13 மணி நேரம் எரிந்தது.
1892 : உலக கொலம்பியாக் கண்காட்சி சிகாகோவில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
1897 : சிகாகோ பல்கலைக்கழகத்தின் யெர்க்ஸ் ஆய்வகம் அர்ப்பணிக்கப்பட்டது.
1911 : நியூயார்க்கில் சினிமா ரசிகர்களுக்காக பிக்சர்ஸ் எனும் வார இதழ் வெளிவர ஆரம்பித்தது.
1923 : மூனிச்சில் டாய்ச் அருங்காட்சியகத்தில் முதலாவது கோளரங்கம் திறக்கப்பட்டது.
1931 : ஜப்பான் பேரரசு ராணுவத்தினரின் சக்குரக்காய் என்ற ரகசியக் குழு ராணுவப் புரட்சியை நிகழ்த்தி தோல்வி கண்டது.
1944 : இரண்டாம் உலகப்போர் :- ரஷ்யாவில் கலினின்கிராதில் ஜெர்மனி குடிமக்கள் பலர் செஞ்சேனையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனியின் ஆச்சென் நகரம் அமெரிக்கர்களிடம் வீழ்ந்தது.
இரண்டாம் உலகப் போர் :- ஜப்பான் விமானப்படையினரின் முதலாவது கமிக்காஸ் தற்கொலைத் தாக்குதல் ஆஸ்திரேலியக் கப்பல் மீது நடத்தப்பட்டது.
1945 : பிரான்ஸில் முதன் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
1950 : சீனப் படைகள் திபெத்தை ஆக்கிரமித்தன.
பெல்ஜியத்தில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.
1959 : நியூயார்க்கில் குகன்ஹெய்ம் அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.
1960 : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் அஜய் என்ற ரோந்துப் படகு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
1966 : வேல்ஸில் அபெர்பான் எனும் கிராமத்தில் நிலக்கரிக் கழிவுகள் அடங்கிய பாறைகள் பள்ளிக்கூடம் மீது விழுந்ததில் 116 பள்ளி சிறுவர்கள் உட்பட 144 பேர் உயிரிழந்தனர்.
1971 : ஸ்காட்லாந்து, கிளாஸ்கோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் எரிவாயு வெடிப்பினால் 22 பேர் உயிரிழந்தனர்.
1987 : யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய ராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், நோயாளிகள், ஊழியர்கள் உட்பட 70 பேர் கொல்லப்பட்டனர்.
1993 : சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி அகல ரயில் பாதையில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.
1994 : சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து விழுந்ததில் 32 பேர் உயிரிழந்தனர்.
2005 : குறுங்கோள் ஏரிஸின் படங்கள் எடுக்கப்பட்டன.
2018 : நைஜீரியாவில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.
2019 : மேற்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.

👍1
  அக்டோபர் 21.
உலக அயோடின் தினம்.
உலக அயோடின் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
அயோடின் சத்துக் குறைபாட்டால் இளம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்படும்.
எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

22 அக்டோபர் 2025-புதன்.
362 : அந்தியோக்கியாவின் அருகில் அமைந்திருந்த அப்போலோவின் ஆலயம் தீக்கிரையானது.
794 : பேரரசர் கன்மு ஜப்பானியத் தலைநகரை ஹியான்- கியோவுக்கு மாற்றினார்.
1383 : போர்ச்சுகல் மன்னர் முதலாம் பேர்டினண்ட் ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1633 : டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியுடன் சீனாவின் மிங் படை தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெற்றது.
1692 : அமெரிக்காவில் கடைசி தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
1707 : 4 பிரிட்டன் கடற்படைக் கப்பல்கள் வழிதவறி சிலித் தீவுகளில் மூழ்கியதில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் உயிரிழந்தனர்.
இதன் காரணமாக முதலாவது நெடுங்கோட்டு சட்டம் 1714 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
1730 : ரஷ்யாவில் லடோகா கால்வாய் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.
1797 : பதிவு செய்யப்பட்ட முதலாவது பாரசூட் பயணம் அன்டிரே-சாக் கர்னெரின் என்பவரால் பாரிஸ் நகருக்கு 3,200 அடி மேலாக நிகழ்த்தப்பட்டது.
1844 : வில்லியம் மில்லரை பின்பற்றிய கிறிஸ்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையும் உலக முடிவையும் எதிர்பார்த்திருந்தனர்.
அடுத்த நாள் பெரும் ஏமாற்ற நாளாக அறிவிக்கப்பட்டது.
1859 : ஸ்பெயின் மொராக்கோ மீது போர் தொடுத்தது.
1875 : அர்ஜென்டினாவுக்கான முதலாவது தொலைத் தொடர்பு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
1877 : ஸ்காட்லாந்தில் பிளான்டயர் சுரங்க விபத்தில் 207 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.
1878 : செயற்கை ஒளிக்கு கீழ் முதலாவது ரக்பி போட்டி இங்கிலாந்தின் சால்போட் நகரில் நடைபெற்றது.
1927 : நிகோலா டெஸ்லா ஒருமுனை மின்சாரம் உட்பட 6 புதிய கண்டுபிடிப்புகளை அறிவித்தார்.
1929 : இந்தியாவில் முதன் முதல் விமானத் தபால் தலைகள் வெளியிடப்பட்டது.
1941 : இரண்டாம் உலகப் போர் :- பிரெஞ்சு எதிர்ப்புக் குழுவின் உறுப்பினர் கை மோக்கே மற்றும் 29 பணயக் கைதிகள் நாஜி ஜெர்மனிப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1943 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனியின் காசெல் நகரம் மீது பிரிட்டன் விமானப்படை குண்டுவீச்சு நடத்தியதில் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.
1946 : அல்பேனியாவின் கரைக்கு அப்பால் பிரிட்டன் போர்க்கப்பல் கண்ணிவெடியில் சிக்கியதால் 40 பிரிட்டன் கடற்படையினர் உயிரிழந்தனர்.
1947 : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் மோதல் தொடங்கியது.
1949 : ரஷ்யா தன் முதலாவது அணுகுண்டை வெடிக்கச் செய்தது.
1953 : லாவோஸ் பிரான்ஸிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1956 : பாகிஸ்தான், கராச்சியில் கான்கிரீட் கூரை பாகம் விழுந்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.
1960 : மாலி பிரான்ஸிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1962 : பக்ராநங்கல் அணைக்கட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
1964 : பிரெஞ்சு எழுத்தாளர் ஜான் பவுல் சார்லசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
எனினும் அவர் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.
1965 : இந்தியா-பாகிஸ்தான் இடையே இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.
1966 : சோவியத் ஒன்றியம் லூனா -12 விண்கலத்தை சந்திரனை நோக்கி ஏவியது.
1968 : நாசாவின் அப்பல்லோ -7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1970 : துங்கு அப்துல் ரகுமான் மலேசியாவின் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
1975 : சோவியத்தின் ஆளில்லா விண்கலம் வெனீரா -9 வெள்ளிக் கோளில் தரை இறங்கியது.
1987 : யாழ்ப்பாணம், அராலித்துறையில் இந்திய அமைதிப்படையின் ஹெலிகாப்டர் தாக்கியதில் பல பயணிகள் கொல்லப்பட்டனர்.
1996 : ஆந்திராவில் புயல், மழை வெள்ளத்தால் 270 பேர் பலியானார்கள்.
2005 : நைஜீரியாவில் பெல்வியூ ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 117 பேரும் உயிரிழந்தனர்.
2007 : எல்லாளன் நடவடிக்கை :- இலங்கையின் அனுராதபுரம் இலங்கை வான்படை தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 21 பேரும் இலங்கைப் படையினர் 14 பேர் கொல்லப்பட்டு பல விமானங்கள் அழிக்கப்பட்டன.
2008 : இந்தியா சந்திராயன்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை சந்திரனை நோக்கி ஏவியது.

  அக்டோபர் 22.
உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்.
உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் அக்டோபர் 22 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் 1998 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
திக்குவாய்க்கு எதிரான கண்ணோட்டம் பலரிடம் உள்ளது. உலக மக்கள் தொகையில் 1 சதவீதம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதால், இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

  22 அக்டோபர் 1797.
உலகின் முதலாவது பாராசூட் பயன்பாடு நிகழ்ந்தது. அதனை நிகழ்த்தியவர் ஆண்ட்ரூ ஜாக் கேர்னரின் என்ற பிரஞ்சுக்காரர்.
அதனை அவர் நிகழ்த்தியது பாரிஸ் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள மான்சூ பூங்காவின் மேலே 3,200 அடி உயரத்திலிருந்து.
23 அடி விட்டம் கொண்ட பாராசூட் குடையின் கீழே ஒரு வாளியைக் கட்டி அதனுள் அமர்ந்துகொண்டார். பாராசூட்டின் மேல்புறம் ஒரு ஹைட்ரஜன் பலூனை இணைத்து மேலே எழும்பச்செய்தார்.
பாராசூட் 3,200 அடி உயரம் மேலே எழும்பிய பின்னர் பலூனை வெட்டிவிட்டார்.
உடன் பாராசூட்டில் (வாளியில்) அமர்ந்தபடியே தரையை நோக்கி வேகமாக இறங்கினார்.
மிகுந்த ஆட்டத்துடன் இறங்கினாலும் புறப்பட்ட இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி ஓரிடத்தில் காயங்கள் இன்றி தரையிறங்கி முடித்தார்.

👍2
  22 அக்டோபர் 2008.
இந்தியா சந்திரனை நோக்கிய சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது.
இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும்.
இப்பணித்திட்டத்தின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார்.

23 அக்டோபர் 2025-வியாழன்.
425 : மூன்றாம் வாலண்டினியன் ஆறு வயதில் ரோமப் பேரரசன் ஆனான்.
1157 : டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
மன்னன் மூன்றாம் ஸ்வெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசன் ஆனான்.
1707 : பிரிட்டனின் முதல் நாடாளுமன்றம் கூடியது.
1766 : பிலிப்பைன்ஸில் மேயான் எரிமலை சீறியதில் 2,000 பேர்களுக்கு மேல் உயிரிழந்தனர்.
1814 : இங்கிலாந்தில் யார்க் மருத்துவமனையில் ராணுவ அதிகாரி ஒருவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் புதிய மூக்கு பொருத்தப்பட்டது.
1870 : பிரான்ஸின் மெட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இறுதிப்போரில் புருஷியா வெற்றி அடைந்தது.
1905 : சிலியில் தொழிலாளர்களின் வன்முறைக் கிளர்ச்சியில் பலர் உயிரிழந்தனர்.
1912 : முதலாம் பால்கன் போர் :- செர்பியாவுக்கும் உஸ்மானியப் பேரரசுக்கும் இடையே குமனோவோ என்ற இடத்தில் போர் ஆரம்பமானது.
1915 : நியூயார்க் நகரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வாக்கு உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1917 : லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
1919 : எகிப்தில் தேசியவாதிகளின் ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.
1923 : தேசபந்து சித்தரஞ்சன் தாஸின் ஃபார்வர்ட் என்னும் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.
1941 : உக்ரைனின் ஒடேசா நகரில் 19 ஆயிரம் யூதர்கள் ருமேனியா மற்றும் ஜெர்மனிப் படையினரால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
மறுநாள் மேலும் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
1944 : இரண்டாம் உலகப்போர்:- மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பைன்ஸில் ஆரம்பமானது.
இரண்டாம் உலகப் போர் :- சோவியத்தின் செம்படைகள் ஹங்கேரியை அடைந்தன.
1946 : ஐநா பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயார்க்கில் ஆரம்பமானது.
1954 : அகில இந்திய வானொலியில் சங்கீத சம்மேளனம் முதன்முதலாக ஒலிபரப்பானது.
1956 : ஹங்கேரி புரட்சி :- ஹங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர்.
ஹங்கேரி புரட்சி நவம்பர் 04 ல் அடக்கப்பட்டது.
1958 : கனடா, நோவா ஸ்கோசியாவில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 174 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர்.
இவர்களில் 100 பேர் மட்டும் நவம்பர் 1 வரையில் மீட்கப்பட்டனர்.
1966 : ஐ.நா.சபையின் மைய மண்டபத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.
1977 : ஹைதராபாத் தொலைக்காட்சி நிலையம் துவங்கப்பட்டது.
1980 : ஸ்பெயினில் ஒர்ட்டுல்லோ எனுமிடத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் குண்டு வெடித்ததில் 48 குழந்தைகள் உட்பட 51 பேர் உயிரிழந்தனர்.
1983 : லெபனான் உள்நாட்டுப் போர் :- லெபனானின் பெய்ரூட் நகரில் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு ராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர்.
1989 : கம்யூனிச ஹங்கேரி மக்கள் குடியரசு கலைக்கப்பட்டு ஹங்கேரி குடியரசு நிறுவப்பட்டது.
1991 : தென்னாப்ரிக்காவை ஐந்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட அனுமதிக்கப்பட்டது.
ஈழப்போரில் அனாதைகளான பெண்பிள்ளைகளின் மறுவாழ்வுக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம் விடுதலைப்புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
கம்போடியா-வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதி ஒப்பந்தம் பாரிஸில் கையெழுத்திடப்பட்டது.
1992 : ஜப்பான் மன்னர் அகிடோ சீனாவிற்கு விஜயம் செய்தார்.
1998 : இஸ்ரேல்-பாலஸ்தீன பிணக்கு :- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் ஆகியோருக்கிடையில் அமைதிக்காக நிலம் என்ற உடன்பாடு எட்டப்பட்டது.
2001 : ஆப்பிள் நிறுவனத்தின் ஐ பேட் வெளியிடப்பட்டது.
வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரிஷ் குடியரசு படை ஆயுதக் களைவில் ஈடுபட்டது.
காஷ்மீர் விமானத் தளத்தை தகர்க்க தீவிரவாதிகளின் தற்கொலைப்படை முயற்சி முறியடிக்கப்பட்டது.
4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.
2002 : மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்சென் தீவிரவாதிகளால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
2004 : வடக்கு ஜப்பான் நீகாட்டாவில் நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர்.
2,200 பேர் காயமடைந்தனர்.
2006 : இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
2011 : துருக்கியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 582 பேர் உயிரிழந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
2018 : 2,400 ஆண்டுகள் உலகின் மிகப் பழமையான கிரேக்கக் கப்பல், கருங்கடலின் அடியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

  அக்டோபர் 23.
கிட்டூர் ராணி சென்னம்மா.
இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த கிட்டூர் ராணி சென்னம்மா 1778ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கர்நாடகத்தில் பெல்காம் அருகே உள்ள ககதி கிராமத்தில் பிறந்தார்.
இவர் சிறுவயதிலேயே குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில்வித்தையில் தேர்ச்சி பெற்றார். துணிச்சல்காரப் பெண் என்றும் பெயர் பெற்றுள்ளார். மிகவும் செழிப்பாக இருந்த கிட்டூர் ராஜ்ஜியத்தை கைப்பற்ற ஆங்கில அரசு முடிவு செய்தது.
நவீன போர்க் கருவிகள், அதிக வீரர்கள் என்று அதிக வலிமையுடன் இருந்த ஆங்கிலேயப் படையை எதிர்த்து போராடிய ராணியின் வீரர்களால் ஆங்கிலேய வீரர்களை தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும், முயற்சியை விடாமல் தொடர்ந்து போராடிய சென்னம்மா சிறைபிடிக்கப்பட்டார்.
புனித நூல்களைப் படித்தும், பூஜைகளில் ஈடுபட்டும் சென்னம்மா தனது சிறை வாழ்வை கழித்தார். இவர் தன்னுடைய 50வது வயதில் சிறையிலேயே (1829) மறைந்தார்.
விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முன்னணி வீராங்கனையாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வீரச் சின்னமாகவும் இன்றளவும் சென்னம்மா கொண்டாடப்படுகிறார்.

அக்டோபர் 23, 1917.
லெனின், அக்டோபர் புரட்சிக்கு அறைகூவல் விடுத்த நாள்.
அக்டோபர் புரட்சி உலக வரலாற்றில் முக்கிய அங்கமாக உள்ளது.
போல்ஷெவிக் புரட்சி {Bolshevik revolution) எனவும் அறியப்படும் அக்டோபர் புரட்சி (October revolution), 1917ம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் பெட்ரோகிராட்டில் (தற்போது லெனின்கிராட்) ஏற்பட்ட ரஷ்ய பொதுவுடைமைக் கொள்கைப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும்.
இது கார்ல் மார்க்ஸின் கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப் புரட்சியாகும்.

  அக்டோபர் 23, 1946.
ஐ.நா. சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கிய நாள்.
1943 டிசம்பர் மாதத்தில் டெஹ்ரானில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்க குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சோவியத் அதிபர் ஸ்டாலின் முதலியவர்கள் கலந்துகொண்டு உலக ஜனநாயக நாடுகளின் கூட்டுறவுக்கு அழைப்பு விடுத்தனர்.
1945 ஏப்ரலில் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோ நகரில் 58 நாடுகளின் பிரதிநிதிகள் கூடினர்.
1945 ஜூன் 26ல் ஐ.நா. சபையின் சட்டதிட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பின்னர் 1945 அக்டோபர் 23ம் நாள் ஐ. நா. சபையின் முதலாவது கூட்டம் துவங்கி
நடைபெற்றது.

  அக்டோபர் 23, 1966.
ஐக்கிய நாடுகள் அவை மைய மண்டபத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற நாள்.
தமிழகத்தை சேர்ந்த பிரபல கர்நாடக இசைப் பாடகி, எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத் துறையில், பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அவரது இசை சாதனையை பாராட்டி நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதினை வழங்கி, மத்திய அரசு அவரை கௌரவித்தது.
உலகெங்கும் பல நாடுகளில், இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள சுப்புலட்சுமி, 1966-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் தனது இசைக் கச்சேரியை அரங்கேற்றினார்.
இதன் மூலம், ஐ.நா.சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்திய இசைக் கலைஞர் என்ற பெருமை பெற்றார்.

  அக்டோபர் 23, 2001.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பாட் வெளியிடப்பட்ட நாள்.
ஐ-பாட் என்பது ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய கையடக்க மியூசிக் பிளேயர் ஆகும். இதை ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார்.
2008-ல் பிளாஷ் மற்றும் ஹார்டிஸ்க் கொண்டு பாடல்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐப் பாடுகளை யு.எஸ்.பி ஸ்டோரேஜாகவும் பயன்படுத்த முடியும். அதன் கொள்ளளவு வெவ்வேறு வகைகளுக்கு தகுந்தாற்போல் அமைந்துள்ளது.
ஐ- டியூன்ஸ் மென்பொருள் மூலம் பாடல்கள், படங்களைப் பதியலாம்.

24 அக்டோபர் 2025-வெள்ளி.
1260 : சார்ட்ரஸ் கதீட்ரல் பிரான்ஸின் ஒன்பதாம் லூயி மன்னரால் திறந்து வைக்கப்பட்டது.
இது தற்போது யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1605 : அக்பரின் மகன் சலீம் ஜஹாங்கீர் என்ற பட்டத்துடன் மொகலாயச் சக்கரவர்த்தியாக டில்லி அரியணை ஏறினார்.
1648 : ஐரோப்பாவில் வெஸ்ட்பாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது.
1700 : பிரிட்டனின் முதல் வார இதழான தி வீக்லி எண்டர்டெயின்மெண்ட் வெளிவர ஆரம்பித்தது.
1801: மருதுபாண்டியர் சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
1851 : யுரேனஸ் கோளைச் சுற்றும் அம்ப்ரியல், ஏரியல் ஆகிய நிலவுகளை வில்லியம் லாசெல் கண்டுபிடித்தார்.
1857 : உலகின் முதலாவது கால்பந்தாட்ட அணி ஷெபீல்ட் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1861 : அமெரிக்காவில் கண்டங்களுக்கு இடையேயான முதலாவது தந்தி தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
1871 : லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீனக் குடியேறிகள் 20 பேர் வரை சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.
1901 : அன்னி எட்சன் டெய்லர் நயாகரா நீர்வீழ்ச்சியை ஒரு பீப்பாயில் சென்ற முதல் நபர் ஆனார்.
1902 : மேற்கு குவாட்டமாலாவில் சாண்டா மரியா எரிமலை வெடித்ததில் 6 ஆயிரம் பேர்வரை உயிரிழந்தனர்.
1911 : வட கரோலினாவில் ரைட் சகோதரர்கள் தமது விமானத்தில் வானில் 9 நிமிடம் 45 நொடி பறந்தார்கள்.
1914 : தென்னாப்ரிக்காவில் ராணுவச் சட்டம் கொண்டு வந்ததை அடுத்து கிளர்ச்சி ஏற்பட்டது.
1917 : ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி நடைபெற்றது.
முதலாம் உலகப் போர் :- ஜெர்மனிப் படைகளிடம் இத்தாலி பெரும் தோல்வி அடைந்தது.
1930 : பிரேஸிலில் நடைபெற்ற ராணுவப் புரட்சியில் ஜனாதிபதி வாஷிங்டன் லூயிஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1931 : அமெரிக்காவில் ஹட்சன் ஆற்றின் மீது ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.
1934 : மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
1935 : இத்தாலி எத்தியோப்பியாவைக் கைப்பற்றியது.
1938 : அமெரிக்கா தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்களைத் தடை செய்தது.
1939 : அமெரிக்காவில் நைலான் துணிகள் விற்பனைக்கு வந்தன.
1941 : இந்தியாவில் தகவல் ஒலிபரப்புத் துறை ஆரம்பிக்கப்பட்டது.
1944 : இரண்டாம் உலகப் போர்:- முசாசி என்ற ஜப்பான் போர்க்கப்பலை அமெரிக்க விமானங்கள் தாக்கி மூழ்கடித்தன.
அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் பிரின்ஸ்டன் பிலிப்பைன்ஸில் மூழ்கியது.
1945 : உலக நாடுகள் இடையே ஒற்றுமை, சமாதானம் ஆகியவற்றை வளர்ப்பதற்காக ஐநா சபை நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
1949 : ஐ.நா. தலைமையகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.
1960 : ரஷ்யாவின் பைக்கனூர் விண்தளத்தில் ஏவுகணை வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1961 : மால்டா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் அடைந்தது.
1964 : வடக்கு ரொடீஷியா பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்து சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது.
பங்கு பத்திரங்களை மாற்றி கொடுப்பதற்காக உபயோகப்படுத்தும் இந்தியத் தபால்தலைகள் வெளியிடப்பட்டது.
இத்துடன் சுங்க இலாகா சம்பந்தப்பட்ட தபால்தலையும் வெளியிடப்பட்டது.
1984 : கல்கத்தாவில் எஸ்பிளேனடிற்கும், பவானிப்பூருக்கும் இடையே அகல ரயில் பாதை திறந்து வைக்கப்பட்டது.
1994 : கொழும்புவில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்கா உட்பட 51 பேர் கொல்லப்பட்டனர்.
2003 : கான்கார்ட் விமானம் தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது.
2007 : சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவை சுற்றி வரும் முதல் சீன ஆளில்லா விண்கலம் சாங் -1 தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
2016 : பாகிஸ்தானிலுள்ள ஒரு போலீஸ் பயிற்சி அகாடமியில் தற்கொலை குண்டு வெடித்ததில் 61 பேர் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் 24.
உலக போலியோ தினம்.
உலக போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இளம்பிள்ளை வாத நோய்க்கு முதன்முறையாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் டாக்டர் ஜோனஸ் சால்க் ஆவார்.
இளம்பிள்ளை வாத நோயானது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது.
இத்தினத்தின் முக்கிய நோக்கம், போலியோவை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதை ஒழிக்க உலகளவில் முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.

அக்டோபர் 24, 1801.
மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்.
1801 ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி ஆங்கிலேயர்கள் அவர்களை தூக்கில் போட்டனர். அவர்களது உடல்கள் இரண்டு நாட்களாக
தூக்கிலேயே தொங்கியது.
இதனால் சிவகங்கை சீமையில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இரண்டு நாளில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்று பக்கங்களில் வட இந்தியாவில் நடைபெற்ற போர்களே வீரம் செறிந்த வரலாறுகளாக பெரும்பாலும் காட்டப்பட்டிருக்கும்.
ஆனால் சிப்பாய் கலகத்திற்கு முன்பாகவே வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தெற்கில் இருந்து முதன்முதலில் கூக்குரலிட்டவர் மாமன்னர் பூலித்தேவர்.
அவரை தொடர்ந்து ஆங்கிலேயப் பேரரசை எதிர்த்தவர் மாவீரர் திப்பு சுல்தான். அவர்கள் வழியில் தீரத்தோடு அந்நிய ஆட்சியை அகற்ற போராடியவர்கள் தான் மாமன்னர்கள் மருது சகோதரர்கள்.