Telegram Web Link
அக்டோபர் 17.
கவியரசு கண்ணதாசன்
நினைவு தினம்.

இவரின் இயற்பெயர் முத்தையா.
காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகியவை இவருடைய புனைப்பெயர்கள் ஆகும்.

இவர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார். பராசக்தி, ரத்தத்திலகம், கருப்புப் பணம், சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இயேசு காவியம், பாண்டிமாதேவி உள்ளிட்ட காப்பியங்களையும், அம்பிகை அழகு தரிசனம், தைப்பாவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்களையும், அர்த்தமுள்ள இந்துமதம் ஆகியவற்றையும் படைத்துள்ளார்.

ஆழமான வாழ்க்கை ரகசியங்களை தன்னுடைய எளிமையான வரிகள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்த கவியரசர் 54வது வயதில் 1981ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி மறைந்தார்.
1
அக்டோபர் 17, 1979.

அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நாள்.

இந்தியாவில் ஏழை மக்களுக்கு குறிப்பாக தொழுநோயாளிகளுக்கு அருந்தொண்டாற்றிய ஒருவரை கௌரவித்ததன் மூலம் நோபல் பரிசுக் குழு பெருமை தேடிக்கொண்டது.

20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதநேயவாதிகளில் ஒருவரான அன்னை தெரசாவுக்கு 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1
அக்டோபர் 17, 1972.

எம்.ஜி.ஆரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தொடங்கப்பட்ட தினம் இன்று.
1
வரலாற்றில் இன்று.
18 அக்டோபர் 2025-சனி.

1009 : ஜெருசலேமில் புனித செபுல்கர் கிறிஸ்தவ தேவாலயம் கலிபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றிலும் அழிக்கப்பட்டது.

1356 : சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றிலும் அழிந்தது.

1648 : அமெரிக்காவின் முதலாவது தொழிற்சங்கத்தை பாஸ்டன் ஷூ தயாரிப்பாளர்கள் ஆரம்பித்தனர்.

1748 : ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் முடிவுக்கு வந்தது.

1860 : இரண்டாம் அபினிப் போர் முடிவுக்கு வந்தது.

1867 : ரஷ்யாவிடமிருந்து அலாஸ்கா மாநிலத்தை அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது.
இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

1898 : புவெர்ட்டோ ரிக்கோவை ஸ்பெயினிடம் இருந்து அமெரிக்காக் கைப்பற்றியது.

1922 : பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

1944 : சோவியத் ஒன்றியம் செக்கோஸ்லோவேகியாவை முற்றுகையிட்டு நாஜி ஜெர்மனியிடம் இருந்துக் கைப்பற்றியது.

1945 : வெனிசுலாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியை அடுத்து அதன் ஜனாதிபதி பதவி இழந்தார்.

1954 : அமெரிக்காவின் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்ஸிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.

1960 : பிரிட்டிஷ் செய்தித்தாளான நியூஸ் க்ரோனிக்கல், டெய்லி மெயில் உடன் இணைந்தது.
லண்டன் மாலை செய்தித்தாளான ஸ்டார், தி ஈவினிங் நியூஸ் உடன் இணைந்தது.

1963 : பெலிசேட் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பூனை என்ற பெயரை பெற்றது.

1967 : சோவியத் விண்கலம் வெனீரா -4 வெள்ளிக் கோளை அடைந்தது.
வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1991 : தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

அஜர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.

2004 : சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரால் கொல்லப்பட்டார்.

2007 : கராச்சியில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசீர் பூட்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர்.
450 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பூட்டோ காயமின்றி உயிர் தப்பினார்.
1
அக்டோபர் 18.
உலக வாசெக்டமி தினம்.
(World Vasectomy Day)

ஆண்களுக்கும் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ய முடியும்.
இந்த அறுவைச் சிகிச்சையை வாசெக்டமி என்கின்றனர். இதற்கு குழாய் அறுப்பு என்று பொருள்.

உலகளவில் அளவான குடும்பங்களை ஏற்படுத்த ஆண்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 18ஐ உலக வாசெக்டமி தினமாக 2013 ல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 18.
சார்லஸ் பாபேஜ்
நினைவு தினம்.
(Charles Babbage)

1810ம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் இணைந்தவர், கணிதத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 1834ம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை இவர் உருவாக்கினார்.

தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் (Analytical Engine) மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை (Difference Engine) வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.

இவர் நியமத் தொடருந்துப் பாதை (Difference Engine) அளவுக்கருவி, சீரான அஞ்சல் கட்டண முறை என பல கருவிகளை கண்டுபிடித்துள்ளார். இவர் தன்னுடைய 79வது வயதில் 1871ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி மறைந்தார்.
அக்டோபர் 18, 1867.

அமெரிக்கா அலாஸ்கா மாநிலத்தை ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய நாள்.

அலாஸ்கா நாள் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமான அலாஸ்காவில் அக்டோபர் 18-ம் நாள் கடைப்பிடிக்கப்படும் சட்டரீதியான விடுமுறை நாளாகும்.

அலாஸ்கா நாள் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமான அலாஸ்காவில் அக்டோபர் 18-ம் நாள் கடைப்பிடிக்கப்படும் சட்டரீதியான விடுமுறை நாளாகும். இது அலாஸ்காவை ஐக்கிய அமெரிக்கா விலை கொடுத்து வாங்கியதைத் தொடர்ந்து, அக்டோபர் 18, 1867-ல் ரஷ்யாவிடமிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்கு ஆட்சி மாறிய நாளைக் குறிக்கிறது.

அலாஸ்கா நாள் மாநிலம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
அக்டோபர் 18, 1922.

பி. பி. சி வானொலி நிலையம் லண்டன் நகரில் துவக்கப்பட்ட நாள்.

அதற்கான தொழில் உரிமை (License ) வழங்கியது லண்டன் தலைமை அஞ்சல் அலுவலகம் (GPO ).
👍1
அக்டோபர் 18, 1954.

உலகத் தொலைத்தொடர்பு வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்திய ட்ரான்சிஸ்டர் ரேடியோ, டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நாள்.

அதுவரை வாக்குவம் ட்யூப்கள் பொருத்தப்பட்ட ரேடியோக்கள்தான் புழக்கத்திலிருந்தன. இது ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் அளவுக்குப் பெரிதாக இருக்கும் என்பதுடன் சுவிட்சைப் போட்டவுடனே வேலையும் செய்யாது. பல நிமிடங்கள் சூடேற வேண்டும்.

ட்ரான்சிஸ்டருக்கு முன்பே வாக்குவம் ட்யூப் கொண்ட போர்ட்டபுள் ரேடியோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவை பெரிதாகவும், எடை அதிகமாகவும் இருந்தன. இந்நிலையில், ட்ரான்சிஸ்டர் எனும் செமிக் கண்டக்டரை 1947ல் பெல் ஆய்வகம் உருவாக்கியது.

அளவில் மிகச்சிறியதானாலும், ரேடியோ, கால்குலேட்டர், கம்ப்யூட்டர் முதலானவற்றை சிறியதாக உருவாக்க உதவியதன்மூலம், ட்ரான்சிஸ்டர் உருவாக்கிய மாபெரும் அறிவியல் முன்னேற்றங்களுக்காக, இதனை உருவாக்கிய 3 ஆய்வாளர்களுக்கும் 1956ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆல்ஃபிரட் நோபல் என்ற அறிவியல் மேதைக்குச் சொந்தமான வெடிமருந்துத் தொழிற்சாலை ஒன்று இருந்தது. ஒருநாள் அது தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. ஆல்ஃபிரட் நோபலின் சகோதரன் அதில் இறந்து போனான். தொழிற்சாலை சாம்பல் மேடாகக் காட்சியளித்தது.

இழப்பையும், இறப்பையும் கண்டு ஆல்ஃபிரட் நோபல் தளர்ந்து போய்த் தரையில் வீழ்ந்து விடவில்லை.
துயரம் என்ற முட்கள்_
தொடர்ந்து அவரது_ இதயத்தைத் துளைத்துக் கொண்டிருந்தாலும், அவர் உழைத்தார்,_ அயராது உழைத்தார், முடிவின்றி முயன்றார்; இறுதியில் 'டைனமைட்டு' என்னும் பாதுகாப்பான வெடிமருந்தைக் கண்டுபிடித்தார்.

சுரங்கம் அமைக்கவும், பாலங்கள் கட்டவும், போரில் பயன்படுத்தவும் இந்த 'டைனமைட்டு' அதிகம் பயன்பட்டது. கோடி கோடியாகப் பணம் குவிந்தது.

அவ்வாறு வந்த அபரிமிதமான அந்தப் பணம்தாள். நோபல் அறக்கட்டளையை நிறுவி, பதினைந்தாயிரம் டாலர் மதிப்புள்ள "நோபல் பரிசு" என்னும் பெரும் பரிசைத் தோற்றுவிக்க நோபலுக்கு உதவியாக அமைந்தது.

அன்று அந்த அறிவியல் மேதை தன்னம்பிக்கை இழந்துபோய்,_
எழ முடியாமல் வீழ்ந்து கிடந்திருந்தால் டைனமைட்' கிடைத்திருக்காது;
அமைதி, இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் அரும்பெரும் சாதனையாற்றிய உலக மேதைகளுக்கு உயர்ந்த விருதாக வழங்கப்படும் நோபல் பரிசும் கிடைத்திருக்காது.
2
அறிந்ததும் அறியாததும்.

சீனப்பெருஞ்சுவர் – உலகின் மிகப்பெரிய கல்லறை?

சீனப்பெருஞ்சுவர் என்பது நாம் நினைப்பது போல் ஒரு பெருஞ்சுவர் இல்லை. சிறு சிறு சுவர்களாகக் கட்டப்பட்டு பின் ஒன்றிணைக்கப்பட்டது.

இதன் முதல் பகுதி கி.மு 475ஆண்டு கட்டத்துவங்கப்பட்டது. அதற்குப்பின் சீனாவை ஆண்ட ஒவ்வொரு மன்னரும் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவின் எல்லையைப் பாதுகாக்க அதைப் பெருஞ்சுவராகக் கட்டினர்.

விண்வெளியிலிருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் தெரியும் என்று யாரோ கிளப்பிவிட, அதை சீனாவின் பாடப்புத்தகங்களிலெல்லாம் சேர்த்திருந்தார்கள்.

பின்னொரு நாள் சீனாவிலிருந்து விண்வெளிக்குச் சென்ற அறிஞர் ஒருவர், க்ராவிட்டி படத்தில் வருவதுபோல் விண்வெளியில் மிதந்து, சுவர் தெரியவில்லை என்று கூறியதையடுத்து பாடப்புத்தகங்களெல்லாம் திருத்தியமைக்கப்பட்டன.

சீனப்பெருஞ்சுவரை சீன மொழியில் “Wan-Li Qang-Qeng” என்று அழைக்கின்றனர். அப்படியென்றால் 10,000Li Long Wall என்று அர்த்தமாம். Li என்பது தோராயமாக 1/3 மைல் நீளம். 15 முதல் 30 அடி அகலமும் (சில இடங்களில்)25 அடி உயரமும் கொண்டது.

சீனப்பெருஞ்சுவரில் கடைசியாக 1983ஆம் ஆண்டு ஜப்பானுக்கும் சீனாவிற்கும் சண்டை நடந்தது. அந்தச் சண்டையின் அடையாளமாக துப்பாக்கி குண்டுகளின் தடங்கள் இன்னும் Gubeikou என்ற இடத்தில் இருக்கும் சுவரில் இருக்கின்றன.

இன்னும் 20 ஆண்டுகளில் சீனப்பெருஞ்சுவரின் ஒரு சில பகுதிகள் மறைந்துபோகலாம். மண்ணால் செய்யப்பட்ட இப்பகுதிகள் காற்றிலும் மழையிலும் கரைந்துவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

சீனப்பெருஞ்சுவரின் மற்றோரு பெயர் உலகின் மிகப்பெரிய கல்லறை..

காரணம் என்னவென்றால், இச்சுவரை கட்டும் பணியில் இறந்த மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு மில்லியன்.
வரலாற்றில் இன்று.
19 அக்டோபர் 2025-ஞாயிறு.


1216 : இங்கிலாந்தின் ஜான் மன்னன் இறக்க, அவரது 9 வயது மகன் மூன்றாம் ஹென்றி ஆட்சிக்கு வந்தான்.

1453 : பிரெஞ்சு பொர்டோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டு போர் முடிவுக்கு வந்தது.

1596 : சான்பிலிப் என்ற ஸ்பெயின் கப்பல் ஜப்பான் கரையில் மூழ்கியது.

1805 : நெப்போலியப் போர்கள் :- ஊல்ம் நகர போரில் ஆஸ்திரியாவின் தளபதி மாக்கின் ராணுவம் நெப்போலியனிடம் சரணடைந்தது.
30 ஆயிரம் கைதிகள் கைப்பற்றப்பட்டனர்.
10 ஆயிரம் பேர் இறந்தனர்.

1812 : நெப்போலியன் படை மாஸ்கோவில் இருந்து பின்வாங்கியது.

1813 : ஜெர்மனியின் லைப்சிக் நகரில் நெப்போலியன் பெரும் தோல்வி அடைந்தான்.
ரைன் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது.

1864 : அமெரிக்க உள்நாட்டுப் போர் :- கூட்டமைப்புப் படையினர் கனடாவில் வெர்மான்ட் மாநிலத்தின் செல் அல்பான்ஸ் நகரைத் தாக்கினர்.

1866 : வெனிடோ, மாந்துவா ஆகியவற்றை பிரான்ஸிடம் ஆஸ்திரியா அளித்தது.
பிரான்ஸ் உடனடியாக அவற்றை இத்தாலியிடம் கொடுத்தது.

1912 : இத்தாலி, திரிப்பொலி நகரை உஸ்மானியரிடமிருந்துக் கைப்பற்றியது.

1921 : லிஸ்பன் நகரில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து பிரதமர் அந்தோனியோ கிராஞ்சோ உட்பட பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.

1935 : எத்தியோப்பியாவை இத்தாலி கைப்பற்றியதை அடுத்து உலக நாடுகளின் கூட்டணி இத்தாலி மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

1943 : 2,098 இத்தாலி போர்க்கைதிகளுடன் சென்ற சின்பிரா என்ற சரக்கு கப்பல் கிரீட் நகரில் சௌதா குடாவில் கூட்டுப் படையினரால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

காசநோய்க்கான ஆன்டிபயாடிக் மருந்து ஸ்ட்ரெப்டோமைசின்,
ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது.

1944 : குவாட்டமாலாவில் 10 ஆண்டுகள் நீடித்த ராணுவப் புரட்சி ஆரம்பமானது.

இரண்டாம் உலகப் போர் :- அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்ஸில் தரையிறங்கின.

1950 : சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தினர் திபெத்தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர்.

சீனா கொரியப் போரில் இணைந்தது.
பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினர் ஐநா படைகளை எதிர்க்க யாலு ஆற்றைத் தாண்டினர்.

1954 : நேபாளத்தில் உள்ள சோ யூ மலையின் உச்சி முதன் முதல் முறையாக எட்டப்பட்டது.

1956 : சோவியத் ஒன்றியமும் ஜப்பானும் அமைதி ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டதன் மூலம் 1945 ஆகஸ்ட் முதல் இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்தது.

1960 : அமெரிக்கா, கியூபா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

1970 : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானம் மிக் -2 இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

1974 : நியூவே நியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்று சுயாட்சி மண்டலமாகியது.

1976 : சிம்பன்சி உலகில் அழிந்து வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.

1977 : தென்னாப்ரிக்காவில் கறுப்பு இனத்தவர்களின் கட்சி, சங்கம், பத்திரிகை ஆகியன தடை செய்யப்பட்டன.

1983 : கிரனாடாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியை அடுத்து அதன் பிரதமர் மோரிஸ் பிஷெப் படுகொலை செய்யப்பட்டார்.

1986 : மொசாம்பிக் அதிபர் சமோரா மேச்சல் உட்பட 33 பேர் விமான விபத்தொன்றில் உயிரிழந்தனர்.

1987 : அமெரிக்க கடற்படை பாரசீக வளைகுடாவில் இரண்டு ஈரானின் எண்ணெய்த் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

1988 : பம்பாயில் புறப்பட்ட விமானம் அகமதாபாத்தில் தரை இறங்கும் போது கடும் மூடுபனி காரணமாக தரையில் மோதி வெடித்து சிதறியதில் 130 பேர் பலியானார்கள்.

பிரிட்டிஷ் அரசு சின் பெயின் மற்றும் அயர்லாந்து துணை ராணுவக் குழுக்கள் மீது வானொலி, தொலைக்காட்சி தடை விதித்தது.

1991 : வட இத்தாலியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் காரணமாக 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1994 : பாகிஸ்தான் பிரதமராக பெனாசிர் பூட்டோ இரண்டாம் முறையாக பதவியேற்றார்.

2000 : பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை ராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.

2001 : 400 அகதிகளை ஏற்றிச் சென்ற இந்தோனேஷியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 146 சிறுவர்கள், 142 பெண்கள் உட்பட 353 பேர் உயிரிழந்தனர்.

2005 : மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசேனுக்கு எதிரான வழக்கு தொடங்கியது.

2009 : தமிழ் நாதம், புதினம் ஆகிய ஈழச்சார்பு இணையத் தளங்கள் நிறுத்தப்பட்டன.

2013 : புவனெஸ் ஐரிஸ் நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 105 பேர் உயிரிழந்தனர்.
👍1
அக்டோபர் 19.
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை.

சுதந்திரப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி நாமக்கல் அடுத்த மோகனூரில் பிறந்தார்.

இவர் 1906-ல் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். திலகர் போன்றவர்களின் தீவிரப்போக்கால் ஈர்க்கப்பட்டு, முழு மூச்சாக அரசியலில் இறங்கினார். பிறகு காங்கிரஸில் இணைந்தார்.

இவர் திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர், கரூர் வட்டார காங்கிரஸ் தலைவர், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். 1932-ல் உப்பு சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலுக்காக இவர் இயற்றித் தந்ததுதான் 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்ற பாடல்.

இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்த இவர் மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார். நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். இவர் பத்மபூஷண் விருது பெற்றுள்ளார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்துள்ளார்.

தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 83வது வயதில் (1972) மறைந்தார்.
அக்டோபர் 19.
சுப்பிரமணியன் சந்திரசேகர்.

இந்திய வானியல் ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தார்.

ஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்த பிறகு, அடர்ந்த பொருண்மையாக மாறுகிறது என்று கணக்கீட்டு ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார். சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். இந்தக் குறிப்பிட்ட நிறை அளவு 'சந்திரசேகர் லிமிட்' எனப்படுகிறது.

இவர் தனது அனைத்து ஆராய்ச்சிகளையும் தொகுத்து 'நட்சத்திரங்களின் அமைப்பு' என்ற நூலாக வெளியிட்டார். பத்மவிபூஷண், அமெரிக்க அறிவியல் கழகத்தின் ஃபோர்ட் பதக்கம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 'ஆடம் பரிசு', ராயல் சொசைட்டியின் 'காப்ளே பதக்கம்' உட்பட பல்வேறு விருதுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.

நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுக்காக 1983ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆராய்ச்சியாளர், ஆசிரியராக விளங்கிய சுப்பிரமணியன் சந்திரசேகர் 84வது வயதில் (1995) மறைந்தார்.
அக்டோபர் 19, 1869.

கடித தொடர்புக்கு பயன்படும் தபால் கார்டு அறிமுகமான நாள்.

1869ம் ஆண்டு முதல் தபால் கார்டு ஆஸ்திரியா நாட்டினரால் வெளியிடப்பட்டது. வியன்னா ராணுவக் கழகத்தை சேர்ந்த டாக்டர் இம்மானுவேல் ஹெர்மன் என்பவர் இதனை வடிவமைத்தார்.

1875ல் சர்வதேச தபால் யூனியன் உருவான போது அப்போதைய இந்தியத் தபால்துறை டைரக்டர் ஜெனரலாக இருந்த மோன்டீத் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியால் 1879 ல் தபால்கார்டு முறை இந்தியாவில் அறிமுகமாகியது.
அக்டோபர் 19, 1849.

"உலகின் முதல் பெண் மருத்துவர்" என்ற பெருமை படைத்த இங்கிலாந்தைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்வெல் மருத்துவத்துறையில் அடியெடுத்து வைத்த தினம் இன்று.

இங்கிலாந்தில் இருந்த பல்கலைக்கழகங்களில் அந்தக் காலத்தில் பெண்களுக்கு மருத்துவம் படிக்க அனுமதி இல்லை.

எனவே அமெரிக்காவில் குடியேறி, நியூயார்க் ஜெனீவா கல்லூரியில் உடற்கூறு மருத்துவம் படித்து பட்டம் பெற்றார்.

1849ல் இவர் உலகின் முதல் பெண் மருத்துவராக மருத்துவப் பதிவுத்துறையில் பதிவு பெற்றார்.
2025/10/31 03:00:57
Back to Top
HTML Embed Code: