Telegram Web Link
⚪️🔴எல்1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் பயணம்!

❗️முழு விவரம்❗️: https://u7news.in/aditya-spacecraft-travels-towards-point-l1

-
@u7news
👍1
⚪️🔴பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் கைது

பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய நிலையில், காஞ்சிபுரம் போலீசாரால் கைது

ஏற்கனவே 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

- @u7news
👍1
⚪️🔴BREAKING: மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம்; இந்த மசோதாவுக்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

- @u7news
👍1
⚪️🔴எங்களுக்கு கொள்கைதான் முக்கியம். கூட்டணி அல்ல - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை எடப்பாடி பழனிச்சாமிதான் பாதுகாத்து வருகிறார் - எஸ்.பி.வேலுமணி

- @u7news
⚪️🔴கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தை சரிபார்க்கும் kmut.tn.gov.in என்ற இணையதளத்திற்குள் ஒரே நேரத்தில் லட்சக் கணக்கானோர் நுழைந்ததால் முடங்கியது!

-
@u7news
👍2
⚪️🔴மகளிர் இட ஒதுக்கீடு: ஒரு மாதத்துக்கு முன்பே கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

நாடாளுமன்ற மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பே உச்சநீதிமன்றம் இந்த மசோதா குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. 

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நாடாளுமன்ற அலுவலகள் நேற்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டடத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
1990களில் இருந்து பல்வேறு அரசுகளால் முயன்றும் நிறைவேற்ற முடியாத  மகளிர் இட ஒதுக்கீடு பாஜக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாஜக அரசு இந்த மசோதாவை கையில் எடுக்க உச்சநீதிமன்றம் காரணம் என்று சொல்லப்படுகிறது. 
ஏனெனில், ஒரு மாதத்திற்கு முன்பே உச்சநீதிமன்றம் இந்த மசோதா குறித்து மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

FOLLOW THE U7NEWS CHANNEL ON WHATSAPP: https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w

"மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? ஏன் பதில் மனு தாக்கல் செய்யவில்லை?  மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த விரும்புகிறீர்களா? இல்லையா? இது மிகவும் முக்கியமான பிரச்னை" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பட்டி அமர்வு கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. மேலும், இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வருகிற அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது. 

மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி 2021 ஆம் ஆண்டு இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு (NFIW) உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

- @u7news
👍1
⚪️🔴விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது

கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது

- @u7news
👍1
⚪️🔴தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை

செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை

சென்னை மற்றும் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை

30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித் துறையினர் சோதனை

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை.

- @u7news
⚪️🔴திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறை வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது.

பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களை அச்சுறுத்தும் சிறுத்தைகளைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில், இதுவரை 6 சிறுத்தைகள் சிக்கி உள்ளன.

- @u7news
❤️அனைவரும் நமது U7news வாட்சப் சேனளில் இணைந்துகொள்ளுங்கள் 🙏

FOLLOW THE U7NEWS CHANNEL ON WHATSAPP:
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
⚪️🔴மகளிர் இடஒதுக்கீடு மசோதா; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு

தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கியவர் ஜெயலலிதா

அதிமுக 1991ல் ஆட்சியை பிடித்தபோது ஜெயலலிதாவுடன் 31 பெண்கள் எம்எல்ஏக்களாகினர் - எடப்பாடி

மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடி அதிமுக தான் என்பது பெருமை

தற்போது இந்தியா முழுமைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்கிறேன் - எடப்பாடி..

- @u7news
👍1
⚪️🔴கனடா வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்.

கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்.

எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

- @u7news
⚪️🔴காவிரியில் உரிய நீரை திறக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 24 ஆவது கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் தமிழக அரசு மனு.

- @u7news
⚪️🔴வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

வேலூர் மாவட்டத்தில் மழை காரணமாக 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.

மேலும், நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு( 1 முதல் 5ஆம் வகுப்பு வரை) மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரையும், கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- @u7news
👍1
⚪️🔴சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும். விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

- @u7news
⚪️🔴ரூ.560 கோடி இழப்பீடு - முதல்வர் அறிவிப்பு

2022-23ம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்பு

ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

- @u7news
⚪️🔴நிலவின் தென்பகுதியில், உறக்க நிலையில் உள்ள விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் மீது சூரிய ஒளிபடத் தொடங்கியுள்ளது.

இதனால் லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

நிலவு குறித்த ஆய்வுப் பணிக்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் தரையிறங்கியது.

நிலவு குறித்த பல்வேறு ஆராய்ச்சி தகவல்களை விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் அனுப்பின. இந்தப் பணிகள் அனைத்தும், நிலவின் பகல் நேரத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் நிலவில் இரவு நேரம் தொடங்கியதால், லேண்டரும், ரோவரும் தற்காலிகமாக அணைத்து வைக்கப்பட்டன.

*மீண்டு(ம்) இயங்குமா லேண்டர், ரோவர்?*

தற்போது நிலவின் தென் பகுதியில் இரவு முடிந்த நிலையில், ரோவர் மற்றும் லேண்டர் மீது சூரிய ஒளிபடத் தொடங்கியுள்ளது.

மேலும் 14 நாட்கள் சூரிய ஒளி இருக்கும் என்பதால், சூரிய ஆற்றலை பெற்று ரோவர் மீண்டும் செயல்படக் கூடும் என நம்பப்படுகிறது.

விக்ரம் லேண்டர், ரோவர் ஏற்கனவே ஆய்வுப் பணிகளை நிறைவு செய்துள்ள போதிலும், மீண்டும் செயல்படத் தொடங்கினால், அது இஸ்ரோவுக்கு கூடுதல் ஆய்வுத் தகவல்களை அளிக்க உதவும்.

லேண்டர் மீண்டும் செயல்படத் தொடங்குமா என இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

நிலவின் தென்துருவ பகுதியில் இரவு நேரத்தில் 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதீத குளிர் நிலவும் என்பதால், அதை தாங்கும் அளவுக்கு சந்திரயான்-3 விண்கலன்கள் கட்டமைக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் விண்கலன்கள் மீண்டும் விழித்தெழுமா என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
👍1
⚪️🔴சுமை தூக்கும் தொழிலாளியாக ராகுல் காந்தி!

டெல்லி ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பயணிகளின் உடைமைகளை தூக்கிச் செல்லும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

ராகுல் காந்தியை காண வேண்டும் என்று டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அண்மையில் கோரிக்கை வைத்திருந்தனர். 

இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை திடீரென்று ஆனந்த் விஹார் ரயில் நிலையம் சென்ற ராகுல் காந்தி சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, அவர்கள் அணியும் சிவப்பு நிற சட்டை அணிந்து பயணி ஒருவரின் சூட்கேஸை ராகுல் காந்தி சுமந்து சென்றார்.

தொடர்ந்து, சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து ராகுல் காந்தியுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
👍2
2025/10/29 08:02:29
Back to Top
HTML Embed Code: