Telegram Web Link
⚪️🔴விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்... தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு..

பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ட்ரோன் கருவிகளை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயத்தில் நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவும், விவசாயிகள் காலத்தே சாகுபடி பணிகளை மேற்கொண்டு பயிர் உற்பத்தி திறனை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு, வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி வருகிறது.

விவசாயக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் மூலம் மானியத்தில் அமைக்கப்படும் வட்டார மற்றும் கிராம அளவிலான வேளாண் எந்திர வாடகை மையங்களில் தேவைப்படுகின்ற வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளுடன் சேர்த்து டிரோன் கருவிகளையும் மானியத்தில் பெறலாம்.

டிரோன்களைக் கொண்டு வேளாண் எந்திர வாடகை மையம் அமைக்க அல்லது ஏற்கனவே அமைக்கப்பட்ட வேளாண் எந்திர வாடகை மையங்கள், உயர் தொழில்நுட்ப வாடகை மையங்களில் டிரோன்களை வாங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகளுக்கு டிரோன்களின் அடிப்படை விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.5 லட்சம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

டிரோனை மானியத்தில் பெறும் விவசாயிகள் அதனை இயக்குவதற்கான பயிற்சி மற்றும் உரிமத்தினை பெற்று டிரோனை இயக்கலாம் அல்லது ஏற்கனவே பயிற்சி பெற்று உரிமம் பெற்ற இளைஞர்கள் மூலம் இயக்கலாம்.

டிரோனை வாங்க வங்கிக் கடன் பெறும் விவசாயிகளுக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதியில் இருந்து 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w

டிரோன் கருவி வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://mts.aed.tn.gov.in/evaadagai/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
⚪️🔴பூமியில் ஆளே இல்ல... 4 ஆண்டுகளுக்கு பிறகு உலகம் எப்படி இருக்கும்? டைம் டிராவலரின் சுவாரஸ்யங்கள்.

ஒவ்வொரு நபரும் தனது எதிர்காலத்தை அறிய மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். வரவிருக்கும் ஆண்டுகளில் அவருக்கு என்ன நடக்கப் போகிறது என்பது பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முனைப்பு காட்டுவார்கள், இதனால் பிரச்சினைகளை சமாளிக்கத் தயாராகலாம்.

இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு உலகம் எப்படி இருக்கும் என்பதை பார்த்துவிட்டு திரும்பியதாக தற்போது ஒருவர் கூறியுள்ளார். அவர் கூறிய ஒரு விஷயத்தை அறிந்து மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

டெய்லி ஸ்டாரின் அறிக்கையின்படி, சேவியர் என்ற இந்த டைம் டிராவல் பயணி 2027-ல் உலகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி மிகவும் பயமுறுத்தும் விஷயத்தைக் கூறியுள்ளார்.

6 ஆண்டுகளுக்கு பின்னாலான உலகை பார்த்துவிட்டு திரும்பிய முதல் நபர் நான் தான் என்றார் சேவியர். அப்போது பூமியில் வேறு யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

பெரிய கட்டிடங்கள் மட்டுமே இருந்ததாகவும், இத்தாலியின் ரோம் நகரில் உள்ள கொலோசியம் போன்ற பல இடங்களுக்குச் சென்றதாகவும் குறிப்பிட்ட அவர், அங்கு வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும், ஆனால் அப்போது அங்கு யாரையும் காணவில்லை.

உலகில் எஞ்சியிருந்த ஒரே நபர் நான் மட்டும் தான் என்றார். சேவியர் இந்த இடங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த நபர் 2021-ல் முதன்முறையாக டைம் டிராவல் செய்தார், அப்போதும் அவர் இதேபோன்ற கூற்றுக்களை முன்வைத்தார்.

TikTok-ல் பகிரப்பட்ட 21 வினாடி வீடியோவில், சேவியர் ஒரு கட்டிடத்தின் கீழே இருந்து காட்டினார். அது ஒரு கூரையிலிருந்து பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், சுற்றிலும் வானளாவிய கட்டிடங்கள் தெரிந்தன.

ஆனால் இடங்கள் காலியாக இருந்தன. அங்கு மக்கள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. சில வாகனங்கள் நின்று கொண்டிருந்தது.

ஆனால் மனிதர்கள் தென்படவே இல்லை. வீடியோவின் தலைப்பில், என் பெயர் சேவியர், நான் உலகில் தனியாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w

எஞ்சியிருக்கும் கடைசி மனிதனாக தோன்றுகிறது.

தான் கடைசியாக வாழும் மனிதராக தோன்றுவதாகவும் சேவியர் கூறினார். அவரது கூற்றுகளை மக்கள் கேள்வி எழுப்பியபோது, ​​டிக்டாக்கில் வீடியோவைப் பகிர்ந்து கருத்துக்களுக்கு பதிலளித்தார்.

அந்த கிளிப்பில் அவர் தனது கைக்கடிகாரத்துடன் காலியான சாலையை பார்ப்பது போல் தெரிகிறது. வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து தெரியவில்லை.

சுற்றிலும் யாரும் இல்லாததால் நகரம் முற்றிலும் காலியாகத் தெரிந்தது. ஒரு பாதசாரி கூட இல்லை. அதேசமயம் அப்போது இரவு 8.09 மணிதான் ஆகியிருந்தது.

அவர் பகலில் ரோமில் அலைந்து கொண்டிருந்தார், ஆனால் யாரும் அங்கு இல்லை.
👍3
⚪️🔴கரூர் வைஸ்யா வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை..!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள Law Officer பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : கரூர் வைஸ்யா வங்கி

பதவி: Banking Apprentice

காலியிடங்கள் : பல்வேறு காலியிடங்கள்

கல்வித் தகுதி : Graduation

சம்பளம் : ரூ.10,500

வயது வரம்பு : 20-24

பணியிடம் : இந்தியா முழுவதும்

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் : இல்லை

இணையதள முகவரி : https://www.kvb.co.in/

கடைசி தேதி : செப்டம்பர் 30, 2023

• THE U7NEWS • TELEGRAM
• JOIN US: https://www.tg-me.com/u7news
⚪️🔴கிரிக்கெட் வீரராக மாறிய டெலிவரி பாய்

உணவு டெலிவரி செய்பவராக வேலை பார்த்து வந்த, சென்னையை சேர்ந்த லோகேஷ் குமார் (29), நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கு நெட் பவுலிங் செய்ய தேர்வாகியிருக்கிறார்.

WC போட்டிகள் அக்., 5 முதல் நவ., 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக பெங்களூருவில் பயிற்சியில் இருக்கும் நெதர்லாந்து அணி, ஸ்பின் பயிற்சி பவுலர்கள் தேவை என விளம்பரம் செய்திருந்தது. இதற்கு விண்ணப்பித்து மொத்தம் 4 பேர் அணிக்கு தேர்வாகியுள்ளார்.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
⚪️🔴சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து தீ பிடித்தது

செம்பரம்பாக்கம் அருகே ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது

ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு இறங்கி உயிர் தப்பினர்

- @u7news
👍3
⚪️🔴நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் கடைசிநாள் கூட்டம் இன்று நடக்கிறது

மகளிர் இடஒதுக்கீடு மசோதா லோக்சபா, ராஜ்யசபாவில் நிறைவேறியது

5 நாள் சிறப்பு கூட்டம் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய நிலையில் இன்று முடிவடைகிறது

- @u7news
👍1
⚪️🔴நிலவில் இன்று மீண்டும் உயிர்தெழும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், ரோவர்.

விக்ரம் லேண்டர், ரோவருக்கு மறுபிறவி கொடுக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்.

நிலவில் இன்று முதல் சூரியஒளி பட்டு பகல் பொழுது தொடங்குவதால் நடவடிக்கை.

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 முதற்கட்ட ஆய்வை ஏற்கனவே முடித்தது.

நிலவில் இருள் சூழ்ந்ததால் கடந்த 2 வாரங்களாக லேண்டர், ரோவரின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது.

- @u7news
⚪️🔴5 நாள் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று கிடையாது

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஒருநாளுக்கு முன்பே முடித்து கொள்ளப்பட்டுள்ளது

லோக்சபா, ராஜ்யசபாக்கள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

சிறப்பு கூட்டத்தொடரில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியதால் ஒத்திவைப்பு

- @u7news
⚪️🔴குரூப்-4: இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, வரும் 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு.

- @u7news
👍1
⚪️🔴கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல்

மேலக்காவேரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துறையில் இருவரின் உடல் மீட்பு

இருவரின் உடல்களும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

- @u7news
👍1
⚪️🔴தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் 5,000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

திறந்து விடப்படும் தண்ணீரால் குறுவை சாகுபடிகளை சிறப்பாக கவனிப்போம், குறுவை சாகுபடிகளில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் நிவாரணம் அளிக்கப்படும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காவிரி மேலாண்மை வாரியம் கருத்தில் கொள்ளாவிட்டால், அது உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும்-அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

- @u7news
👍1
⚪️🔴சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் கட்டணம் வெளியீடு.

சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் கட்டணங்களை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.

சாதாரண ஏசி வகுப்பு கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூ.1,620 என நிர்ணயம்; ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் ரூ.3,025ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- @u7news
👍1
⚪️🔴முதல் ஒரு நாள் போட்டியில் 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 276 ரன்களை எடுத்தது.

டேவிட் வார்னர் 52 ரன்களும் ஸ்டீவன் ஸ்மித் 41 ரன்களையும் எடுத்தனர்.

முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் முகமது ஷமி.

- @u7news
⚪️🔴தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் உட்பட அத்தகைய பின்னணியில் உள்ள நபர்களின் அறிக்கைகள், செய்திக் குறிப்புகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எந்தவொரு தளத்தையும் வழங்கக்கூடாது” - என செய்தி ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவிக்கை வழங்கி உள்ளது.

இந்திய சட்டத்தால் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தொலைக்காட்சியில் விவாதத்திற்கு அழைக்கப்பட்ட விவகாரம் மத்திய அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்ததை அடுத்து இது வந்துள்ளது. இந்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு,

கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1995 இன் பிரிவு 20 க்கு கவனம் செலுத்தப்பட வேண்டும். மத்திய அரசு உத்தரவு மூலம், ஒழுங்குபடுத்தும் அல்லது பொது நலன் கருதி எந்த தொலைக்காட்சி சேனல் அல்லது நிகழ்ச்சியின் ஒலிபரப்பு/மறுஒலிபரப்பைத் தடை செய்யலாம். மற்றும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, எந்தவொரு வெளிநாட்டு மாநிலத்துடனான இந்தியாவின் நட்புறவு, அல்லது பொது ஒழுங்கு அல்லது கண்ணியம் அல்லது ஒழுக்கம் ஆகியவற்றின் நலன்களுக்காக அத்தகைய உத்தரவுகளை வழங்குவது அவசியமானது மற்றும் பொருத்தமானது என்று கருதப்படும்.

இந்தியாவில் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதம் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் பின்னணியில் உள்ள வெளிநாட்டில் உள்ள நபர் ஒரு தொலைக்காட்சி சேனலில் விவாதத்திற்கு அழைக்கப்பட்டது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்ட நபர், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அயல்நாட்டுடனான இந்தியாவின் நட்புறவு மற்றும் நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்ட பல கருத்துக்களை கூறினார்.

அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்துகிறது மற்றும் அரசியலமைப்பின் கீழ் அதன் உரிமைகளை மதிக்கிறது. டிவி சேனல்களால் ஒளிபரப்பப்படும் உள்ளடக்கம் பிரிவு 20 இன் துணைப் பிரிவு (2) உட்பட CTN சட்டம், 1995 இன் விதிகளுக்கு இணங்க வேண்டும்.

தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் உட்பட அத்தகைய பின்னணியில் உள்ள நபர்களின் அறிக்கைகள், செய்திக் குறிப்புகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எந்தவொரு தளத்தையும் வழங்குவதைத் தவிர்க்குமாறு தொலைக்காட்சி சேனல்கள் அறிவுறுத்தப்படுகின்றன.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
⚪️🔴என் மகள் பெயரில் நல்ல காரியங்கள்...” - விஜய் ஆண்டனி உருக்கமான பகிர்வு

தன் மகள் மீரா மறைவு குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான நடிகர் விஜய் ஆண்டனி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அன்புள்ள நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த சாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஓர் அமைதியான இடத்துக்குத்தான் சென்றிருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள். உங்கள் விஜய் ஆண்டனி” என்று பதிவிட்டுள்ளார்.

திரைத்துறையில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள். இதில், மூத்த மகள் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். தகவல் அறிந்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு காலை 6.10 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இறுதி அஞ்சலிக்குப் பின்பு சிறுமியின் உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
👍4
⚪️🔴விக்ரம் லேண்டரை மீண்டும் இயக்க முயற்சி"

"நிலவில் இன்று முதல் மீண்டும் சூரிய ஒளி பட்ட போதிலும், விக்ரம் லேண்டர் செயல்பட தொடங்கவில்லை"

“14 நாள் உறக்கத்துக்கு பின் இன்று விழித்தெழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து எந்த சிக்னலும் வரவில்லை"-இஸ்ரோ

- @u7news
👍3😁1😢1
⚪️🔴ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆய்வுக்குழு இன்று முக்கிய ஆலோசனை.

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆய்வுக்குழு தலைவராக ராம்நாத் கோவிந்த் உள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட மொத்தம் 8 பேர் குழுவில் உள்ளனர்.

இந்த குழுவின் ஆய்வறிக்கை அடிப்படையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் அமலுக்கு வரும்.

- @u7news
👍2😢1
⚪️🔴பொய் செய்தி பரப்பினார் அண்ணாமலை?

சில நாட்களுக்கு முன்பு பேரறிஞர் அண்ணா தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், அதிமுக, திமுக தலைவர்கள் அதற்குக் கடுமையான எதிர்வினையாற்றினார்கள்.

அண்ணா தொடர்பாக 1956ல் இந்து நாளிதழில் வெளியான செய்தியையே தான் கூறுவதாக அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், இந்து குழுமம் அப்படியான எந்த செய்தியையும் தாங்கள் வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

- @u7news
👍1
⚪️🔴தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

நெல்லையை சேர்ந்த ஆசிரியர் ரோகினி என்பவருக்கு பணி ஒப்புதல் வழங்கக் கோரிய வழக்கு

3 வருடம் தாமதமாக நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ததால் அபராதம் விதிப்பு

வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது ஐகோர்ட் கிளை

- @u7news
2025/10/26 14:38:54
Back to Top
HTML Embed Code: