Telegram Web Link
⚪️🔴காவிரி பிரச்னையில் தும்பை விட்டு வாலை பிடிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம்.

காவிரி டெல்டா பகுதி நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி, நிலங்கள் பாலைவனமான நிலையில், I.N.D.I.A கூட்டணியின் சார்பில் பெங்களூருவில் கூட்டிய கூட்டத்திற்கு வரமாட்டேன் எனவும், என் மாநில மக்கள் நலனே முக்கியம் எனவும், “நானும் ஒரு டெல்டாகாரன்தான்” எனவும் தெரிவித்து, ஸ்டாலின் கூட்டத்தில் கலந்துகொண்டதைத் தவிர்த்திருக்கலாம்"- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

- @u7news
👍3
⚪️🔴ரூ.15,000 இருந்தால் போதும் : இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு கப்பல் போகலாம்!

இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், அங்கிருந்து இந்தியாவிற்கும் அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்வதால் ஒரு புதிய பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்குவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன.

நீங்கள் இந்தியாவிற்குள் பயணிக்க ஆகும் செலவில் 3 நாட்கள் கப்பலில் பயணித்து எமிரேட்ஸ் அடையலாம்.

இதில் நீங்கள் 200 கிலோ வரை லக்கேஜ் கூட எடுத்துச் செல்லலாம் என்பது கூடுதல் சிறப்பு!

இந்தியர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முக்கிய இடமாக உள்ளன.

முக்கியமாக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த மக்களை அமீரகத்தில் அதிகம் காணலாம். இந்திய சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாவிற்காக செல்லும் நாடுகளின் லிஸ்டிலும் முதலிடம் வகிப்பது ஐக்கிய அரபு நாடுகள் (UAE) தான்!

அதனால் இந்தியா- அமீரகத்திற்கு இடையே அடிக்கடி விமான சேவைகள் இயங்கி வருகின்றது.

ஆனால் எல்லோராலும் இங்கிருந்து UAE வரை விமானத்தில் செல்ல செலவு செய்ய முடியாது.

அதனால் பட்ஜெட் விலையில் அங்கு செல்வதற்காக கப்பல் சேவை தொடப்படும் திட்டம் எழுந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்னிந்திய மாநிலமான கேரளா இடையே பயணிகள் கப்பல் சேவை விரைவில் நடைமுறைக்கு வரப் போகிறது.

இது இந்திய வெளிநாட்டவர்களுக்கு வசதியான மற்றும் செலவு குறைந்த பயண முறையை வழங்குகிறது.

டிக்கெட்டுகளின் விலை என்று பார்த்தால் சுமார் 442 திர்ஹம்களாக இருக்கலாம்.

அதாவது ரூ.10,000. அடுத்த டிக்கெட்டின் விலை ரூ.15,000, இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w
👍21
⚪️🔴மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் விருது அறிவித்தது தமிழ்நாடு அரசு.

அடுத்தாண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில், 5 பேருக்கும் விருதுடன் சேர்த்து ₹40,000 பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது.

- @u7news
⚪️🔴மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான். திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகுதான் முறையாக தடங்கல் இன்றி கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம்

கிராமப்புற மக்களின் குரல் எப்போதும், எந்த சூழலிலும் தடையின்றி ஒலிக்க வேண்டும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

- @u7news
⚪️🔴காந்தி ஜெயந்தியான இன்று டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி

காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன

மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது, அது ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒற்றுமை, இரக்க உணர்வை மேலும் வளர்க்க தூண்டுகிறது

காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம் - பிரதமர் நரேந்திர மோடி

- @u7news
👍1
⚪️🔴"எல்லாருக்கும் எல்லாம்" - "கிராம சபை- 02.10.2023 " தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

- @u7news
⚪️🔴தமிழ்நாட்டை சேர்ந்த ISRO விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா:

தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு பத்திரம், நினைவுப் பரிசு வழங்கினார்.

ஒவ்வொரு விஞ்ஞானிகளின் சாதனைகள் குறித்தும் சில நிமிட குறும்படம் ஒளிபரபரப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ₹25 லட்சம் பரிசுத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

"இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை என அப்போது கேட்டவர் அண்ணா

அதனால், அவர் பெயரிலான இந்த அரங்கில், விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

- @u7news
👍2
⚪️🔴BREAKING:

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய 2 பேருக்கு அறிவிப்பு.

- @u7news
👍2
⚪️🔴காவிரி விவகாரம்: தமிழகம், கர்நாடகாவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் -  எடப்பாடி பழனிசாமி

கர்நாடக அரசை கண்டித்து வரும் 6-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி

முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ் மணியன், சி விஜயபாஸ்கர், ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

- @u7news
⚪️🔴காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ம.பி-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்- மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது இந்தியாவின் மிக முக்கிய விஷயங்களுள் ஒன்று.

இதர பிற்படுத்தப்பட்டோர் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனவும், மக்கள்தொகைக்கு ஏற்றவாறு சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு இருக்கிறதா? எனவும் நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம்.

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக நான் கேள்வி எழுப்பும்போதெல்லாம் பாஜக அஞ்சி நடுங்குகிறது, பிரதமர் மோடி ஓடி ஒளிந்துகொள்கிறார், அமித்ஷா அதனை மதவாத பிரச்னையாக மாற்றுகிறார்-ராகுல் காந்தி.

- @u7news
👍2
⚪️🔴கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை! - மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவிப்பு

- @u7news
⚪️🔴மருத்துவர்கள் இருவர், ஜிபிஎஸ் கருவியின் உதவியோடு சாலையில் பயணித்தபோது, ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம்!

தண்ணீர் நிறைந்த ஆற்றை, நேராக செல்லுங்கள்... சாலை என ஜிபிஎஸ் தவறாகக் கூறியதால், வழி தெரியாத மருத்துவர்கள் இருவரும், ஆற்றுக்குள் காருடன் கவிழ்ந்து மூழ்கி பலியாகியுள்ளனர்.

வழிதெரியாத தடத்தில் ஜிபிஎஸ் ஆன் செய்துவிட்டு கூகுள் மேப்பில் வழி பார்த்துக்கொண்டே செல்லும்போது, சாலையே இல்லாத ஓரிடத்தில் சென்று நிறுத்திவிட்டு நேராக செல்லுங்கள் என்று கூகுள் மேப் சொல்லும் போது திரு திருவென முழித்திருக்கும் அனுபவம் பலருக்கும் நேர்ந்திருக்கலாம்.

ஆனால், இங்கே அது ஒரு சம்பவமாக மாறிவிட்டிருக்கிறது. டாக்டர் அத்வைத் (29), தனது நண்பர் மருத்துவர் அஜ்மல் ஆசிஃப் (29) மற்றும் சில நண்பர்களுடன் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு காரை ஓட்டிச்சென்றார்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், பயங்கர இருட்டு, கொட்டும் மழையில், வழி தெரியாமல் அத்வைத் காரை ஓட்டிச் செல்ல, ஜிபிஎஸ் உதவியோடு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கூகுள் மேப் நேராக செல்லுங்கள் என வழி காட்ட, அது சாலையாக அல்லாமல் ஓடும் ஆறாக இருந்துள்ளது.

அதற்குள் கார் கவிழ்ந்ததில், முன்னால் அமர்ந்திருந்த இருவரும் பலியாகினர். மற்ற மூன்று நண்பர்களும் எப்படியே தப்பித்து வெளியேறியுள்ளனர்.

அத்வைத் தனது நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற போது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த டாக்டர் காஸிக் தப்சீர் கூறுகையில், நாங்கள் வழி தெரியாமல் ஜிபிஎஸ் கருவியை ஆன் செய்தோம். நான் காரை ஓட்டவில்லை. அதனால், துல்லியமாக என்ன நடந்தது என்பதை என்னால் கூற முடியவில்லை.

ஜிபிஎஸ் தவறாக ஆற்றை சாலை என்று கூறியதா? அல்லது தவறாக புரிந்துகொண்டார்களா என்பது தெரியவில்லை என்றார்.

ஜிபிஎஸ் கருவியை பின்பற்றி வாகனத்தை ஓட்டும்போது, பொதுவாகவே நள்ளிரவு மற்றும் மழைக்காலங்களில் போக்குவரத்துக் குறைந்த சாலைகளை தேர்வு செய்யும்போது இவ்வாறு நேரிடலாம் என்றும், எந்த வாகனத்தில் பயணிக்கிறோம் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
 
- @u7news
👍2
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
⚪️🔴கடலூர் ஸ்ரீமுஷ்ணம் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி படுகொலை

பள்ளி செல்ல காத்திருந்த +2 மாணவன் ஜீவா கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்

மாணவர் ஜீவாவின் உடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

- @u7news
👍1
⚪️🔴ஈட்டி எறிதலில் தங்கம் வென்றது இந்தியா.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தங்கம் வென்றார்; 62.92 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அசத்தல்.

- @u7news
👍3
2025/10/21 20:33:47
Back to Top
HTML Embed Code: